அசாம் வெள்ள நிவாரண பணிக்கு ரூ.1 கோடி நிதியுதவி : ‘அள்ளித்தந்தே’ மக்களின் அன்பை பெற்ற அக்ஷய்குமார்..!

350

அக்ஷய் குமார்…

கொரோனா பா திப்பு தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து, அசாம் வெள்ள நிவாரண பணிகளுக்கு ரூ.1 கோ டியை பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் வழங்கியுள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பா திப்பு அதிகரித்து வந்தது. இதனை கட்டுப்படுத்த நாட்டு மக்கள் தங்களால் இயன்ற நிதியுதவியை பி.எம். கேர்ஸுக்கு அளிக்கலாம் என்று பி ரதமர் மோடி வேண்டுகோள் வி டுத்தார். இதையேற்று, முதல் ஆளாகா பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் ரூ.25 கோடியை வழங்கினார். அவரது இந்த செயல் பொதுமக்களிடையே பெரும் பாராட்டை பெற்றது.

இந்த நிலையில், மேலும் ஒரு போற்றத்தக்க செயலை செ ய்து மக்களின் அன்பை மீண்டும் கவர்ந்துள்ளார் நடிகர் அக்ஷய்குமார்.

அசாமில் கடந்த ஜுலை மாதம் பெய்த தொடர் கனமழையினால், பிரம்மபுத்திரா உள்பட 13 ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், 30க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் வெ ள்ளத்தில் மிதந்தன. இதனால், 50 லட்சம் மக்கள் பா திக்கப்பட்டுள்ளனர்.

அம்மாநிலத்தில் வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வரும் அசாம் அரசுக்கு, ரூ.1 கோடியை வழங்குவதாக அக்ஷய்குமார் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அம்மாநில முதலமைச்சர் சர்பானந்தா சோனாவால் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “அசாமின் இக்கட்டான நிலையில், நடிகர் அக்ஷய் குமார் ரூ. 1 கோடி வழங்கி, அசாமின் உண்மையான நண்பன் என்பதை நிரூபித்துள்ளீர்கள். இறைவன் அருளால் உங்களுக்கு நீண்ட ஆயுள் கிடைக்கட்டும்,” எனத் தெரிவித்துள்ளார்.