புற்று நோய்க் காரணமாக இறந்த தனுஷின் ஆஸ்தான எடிட்டர் !

261

கோலா பாஸ்கர்…

இயக்குனர் ஒரு படத்தை எப்படி எடுத்து இருக்கிறார்? அந்த படம் ஓடுமா? ஓடாதா? நல்லா இருக்கா? நல்லா இல்லையா? மக்களுக்கு பிடிக்குமா? பிடிக்காதா? என்பதை முதலில் பார்த்து கூறுபவர் எடிட்டர்.

இரவும் பகலுமாக அந்த படத்தில் உள்ள குறைகளை மறைத்து நிறைகளை ஏற்றி இந்த சீனை மட்டும் திருப்பி எடுத்துட்டு வாங்க, இந்த சீன் வேண்டாம் என்று இயக்குனர்களுக்கு எடுத்துச் செல்பவர் எடிட்டர். எடிட்டர் தான் ஒரு படத்தின் காப்பாளன்.

அந்த வகையில், தமிழ் தெலுங்குத் திரைப்பட எடிட்டர் கோலா பாஸ்கர் அவர்கள் திடீரென இன்று புற்று நோய் காரணமாக காலமானார். கடந்த சில நாட்களாக எடிட்டர் கோலா பாஸ்கர் தொண்டை புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்ததாகவும் இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஐதராபாத்தில் காலமானதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இவர் தனுஷ் நடித்த புதுப்பேட்டை, யாரடி நீ மோகினி, போக்கிரி ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்களுக்கும் அவர் எடிட்டிங் செய்துள்ளார்.

தனது மகனை ஹீரோவாகி மாலை நேரத்து மயக்கம் என்ற திரைப்படத்தை அவர் தயாரித்துள்ளார் என்பதும் இந்த படத்தை செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி இயக்கி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.