தடை செய்யப்பட்ட இடத்தில் ஆபாச வீடியோ எடுத்த பூனம் பாண்டே..! கைது செய்தது கோவா போலீஸ்..!

359

பூனம் பாண்டே…

கோவாவின் கனகோனா துணை மாவட்டத்தில் உள்ள சபோலி அணையில் ஆ பாச வீடியோவை படமாக்கியதற்காக நடிகை பூனம் பாண்டேவை கோவா போலீசார் அதிரடியாக கை து செய்தனர்.

கலங்குட் போலீஸ் குழு பூனம் பாண்டேவை கை து செய்து பின்னர் விசாரிப்பதற்காக கனகோனா போலீசாரிடம் ஒப்படைத்தது. நடிகை பூனம் பாண்டே வி சாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்று போலீஸ் சூப்பிரண்டு பங்கஜ் குமார் சிங் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே தடைசெய்யப்பட்ட அரசாங்க இடத்தில் வீடியோவை படமாக்க நடிகையை அனுமதித்ததாக ஒரு இன்ஸ்பெக்டர் உட்பட இரண்டு போலீஸ்காரர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

அணையில் சர்ச்சைக்குரிய வீடியோவை படமாக்க நடிகைக்கு அனுமதி வழங்கியதால், காவல்துறையினரின் குற்றச்சாட்டுக்கு நடவடிக்கை எடுக்கக் கோரி, எதிர்ப்பாளர்கள், முன்னதாக, கனகோனா நகரத்தை முடக்குவதாக அச்சுறுத்தினர்.

பின்னர், கனகோனா காவல் நிலைய இன்ஸ்பெக்டர் துக்காராம் சவான் மற்றும் ஒரு கான்ஸ்டபிள் ஆகியோரை சஸ்பெண்ட் செய்துள்ளதாக எஸ்.பி. அறிவித்தார். இந்த விவகாரத்தில் மாநில உள்துறை துறையின் விசாரணை நிலுவையில் உள்ளது.

முன்னதாக, இந்திய தண்டனைச் சட்டத்தின் 294 பிரிவின் கீழ் பூனம் பாண்டே மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். புகார்களில் ஒன்று சபோலி அணையை நிர்வகிக்கும் மாநில நீர்வளத் துறையால் தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கிடையே இந்த சம்பவம் மாநி லத்தில் ஒரு அ ர சியல் பு யலைத் தூ ண்டியுள்ளது. எ தி ர்க்க ட்சி உறுப்பினர் துர்கதாஸ் காமத், முதலமைச்சர் பிரமோத் சாவந்த் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் பிலிப் நேரி ரோட்ரிகஸ் ஆகியோரை இதற்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வலியுறுத்தியுள்ளார்.

மேலும், எ திர்க்க ட்சித் தலைவர் திகம்பர் காமத், “சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட ஆ பாச வைரல் வீடியோ, அணைகள் போன்ற மிக முக்கியமான இடங்களின் பாதுகாப்பு குறித்து க டுமையான கேள்விகளை எழுப்புகிறது. எந்த நாசவேலையும் மிகப்பெரிய பே ரழிவை ஏற்படுத்தும்.

இதுபோன்ற இடங்களில் அவ்வளவு எளிதில் விதிமீற முடிந்தால், அது பாதுகாப்பு மற்றும் புலனாய்வு அமைப்புகளின் பங்கு குறித்து கடுமையான கேள்விகளை எழுப்புகிறது. இந்த சம்பவம் மீண்டும் ஒரு முறை எச்சரிக்கை மணி எழுப்பியுள்ளது. அரசாங்கம் உடனடியாக செயல்பட வேண்டும்.” என்று கூறினார்.