மணிரத்னம் முதல் சரண் வரை… நிறைவேறாமல் போன கமல்ஹாசனின் 5 திரைப்படங்கள் !

370

கமல் ஹாசன்…

உலக நாயகன் கமல் ஹாசன் Nov 7 தனது 66வது பிறந்தநாளை கொண்டாடினார் . இவ்வேளையில் தண்டோரா டைம்ஸ் தனது வாசகர்களுக்காக, கமல்ஹாசன் நடிப்பதற்காக துவங்கப்பட்டு கைவிடப்பட்ட படங்களின் ஐந்து முக்கிய படங்களின் வரிசையை இங்கே தொகுப்பாக கொடுக்கிறது.

1.தமிழ் சினிமாவில் மிக குறைந்த பட்ஜெட்டிலேயே திரைப்படங்கள் எடுக்கப்பட்டு வந்த நிலையில் கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படம் தான் தமிழ் சினிமாவில் முதல் முறையாக ஒரு கோடி பட்ஜெட்டை தாண்டிய திரைப்படமாகும். 1980களிலேயே இவ்வளவு பெரிய பட்ஜெட்டினை இத்திரைப்படம் கொண்டிருந்தது.
இதனை மணிரத்னம் இயக்க வேண்டி இருந்தது. பின்னர், நடிகரும் இயக்குனருமான ராஜசேகர் இத்திரைப்படத்தின் இயக்கும் பணிகளை மேற்கொண்டார்.

2. கமல்ஹாசன், இயக்குனர் சங்கர் மற்றும் எழுத்தாளர் சுஜாதா கூட்டணியில் மிகப்பெரிய பட்ஜெட்டில் ஒரு முக்கிய திரைப்படம் உருவாக இருந்தது என்பது அனைவரும் அறிந்ததே. ஏற்கனவே இந்தியன் திரைப்படத்தில் இந்த இயக்குனர் நடிகர் கூட்டணி மிகப் பெரிய வெற்றியைப் பெற்று அனைவரின் எதிர்பார்ப்புகளையும் உயர்த்தியது. இரட்டை வேடங்களில் கமல்ஹாசன் நடிகை பிரீத்தி ஜிந்தா உடன் எடுத்த போட்டோ ஷூட் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. எனினும் இந்த படம் அந்த சமயத்தில் கைவிடப்பட்டு பத்து வருடங்களுக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் எந்திரன் திரைப்படமாக உருவாகியது.

3. சந்திரமுகி திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை சந்தித்திருந்த நிலையில் இயக்குனர் பி வாசு உடன் மூன்று வேடங்களில் கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் படத்திற்கான வேலைகள் துவங்கப்பட்டது. ஆனால் அந்த சமயத்தில் கமல்ஹாசன் தசாவதாரம் படத்தில் தன்னை பிஸியாக ஆக்கிக் கொண்டதால் இந்த படம் கைவிடப்பட்டது.

4.வசூல்ராஜா எம்பிபிஎஸ் திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அந்த திரைப்படத்தின் இயக்குனர் சரண் உடன் கமல்ஹாசன் மீண்டும் இணைந்து கலகலப்பான திரைப்படம் ஒன்றை எடுப்பதற்கான அடித்தளம் போடப்பட்டது. ஆனால், தயாரிப்பு பிரச்சனைகளில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இந்த படம் கைவிடப்பட்டது.

5. இந்திய திரைப்பட வரலாற்றிலேயே அதிக எதிர்பார்ப்புடன் துவங்கப்பட்ட மருதநாயகம் திரைப்படம் இன்றளவும் கோடிக்கணக்கான மக்களின் கனவாகவே இருந்து வருகிறது. இந்த திரைப்படம் நினைவாக மாறும் நாள் விரைவில் வரும் என நம்புவோம்.