சீரியல் நடிகைக்கு தூக்கு மாட்டிகொள்ள உதவிய கணவன் – சீரியல் நடிகை வெளியிட்ட வீடியோ !

589

ஸ்ரீதேவி…

என்னதான் சினிமாவில் ஜெயித்து, பெயரெடுத்து, நிலைநாட்டி, மக்கள் மனதில் கொடி நாட்டினாலும், வெள்ளித்திரை நடிகர்களை விட சின்ன திரை நடிகர்கள், மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்கள்.

முன்பெல்லாம் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் சீரியலுக்கு வருவார்கள், தற்போது சீரியலில் நடிப்பவர்களுக்கு சினிமா வாய்ப்புகள் கதவைத் தட்டி வருகிறது. இந்நிலையில் ராஜா ராணி, தங்கம், கல்யாணம் முதல் காதல் வரை , உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளவர் நடிகை ஸ்ரீதேவி.

போன வருடம் தான் அசோக் என்பவரை திருமணம் செய்தார். திருமணம் ஆனாலும் நடிப்புக்கு முழுக்கு போடாமல் இன்னும் சீரியல்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.

இவர் சமூக வலைதளங்களில் அவ்வப்போது தனது கணவருடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவார். மேலும் இந்த சீரியலில் தூக்கு மாட்டி கொள்வது போன்ற சீன் ஒன்று எடுக்கப்பட்டது.

உடனே மற்ற கணவர்கள் போல் இதுதான் சாக்கு என்று ஜாலியாக அந்த சீன் எடுக்கும் போது அவருக்கு தூக்கு போடுவதற்கு அவரது கணவர் உதவினார். எனவே வீடியோவை அவரது மனைவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் உங்கள் கணவர் சூட்டிங் ஸ்பாட்டில் கூட உங்களுக்கு உதவுகிறார். நீங்கள் ரொம்ப லக்கி என எல்லோரும் இந்த ஜோடியை பாராட்டி வருகிறார்கள்.