“இந்த பொங்கல் உங்களுக்கு சூப்பர் Collection மா” – மாஸ்டர் படத்தை பார்த்து வியந்துபோன சென்சார் அதிகாரிகள்!

359

மாஸ்டர்…

ரெண்டே படத்துல தமிழ் சினிமாவின் மோஸ்ட் வாண்டட் இயக்குனர் ஆகிவிட்டார் லோகேஷ் கனகராஜ். தான் இயக்கிய மாநகரம், கைதி படத்திற்கு பிறகு விஜய் உடன் இணைந்து “மாஸ்டர்” படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.

விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், அர்ஜூன் தாஸ், அனிருத் என சரவெடி பட்டாளத்தையே படத்திற்குள் கொண்டு வந்தார். படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீஸிற்கு காத்திருந்த போது கொரோனா வந்து போட்டுத்தாக்க படம் வெளியாகவில்லை.

அப்டேட்டிற்காக போனி கபூர் போல ரசிகர்களை ஏமாற்றாமல் பாடல்களும், லிரிக் வீடியோக்களையும் வெளியீட்டு ரசிகர்களை எப்போதும் டியூனிங்கில் வைத்திருந்தார்கள். காத்திருந்து காத்திருந்து அடுத்த வருடமே வந்து விட்டது, இதுக்கு மேல தாங்காது என மாஸ்டர் படத்தை பொங்கலுக்கு வெளியிட தயாராகிவிட்டனர்.

திரைப்படம் ஓடிடியில் ரிலிஸ் ஆகும் என தகவல் பரவியது. ஏற்கனவே ‘சூரரைப் போற்று’ படத்தை தியேட்டரில் பார்க்க முடியாமல் போனதால் பதறிப்போன ரசிகர்கள், மாஸ்டர் படம் கண்டிப்பாக தியேட்டரில் தான் வேணும் என சமூக வலைதளங்களில் பொங்கினார்.

அதன் பொருட்டு படம் தியேட்டர் + ஓடிடி , இரண்டிலும் படம் வெளியாகும் என அறிவிப்பு வெளியானது. மேலும் பொங்கலுக்கு வேறு எந்த படமும் வெளியீடு இல்லை, மாஸ்டர் படமே அனைத்து தியேட்டர்களிலும் வெளியாகும் என்ற தகவலால் ரசிகர்களும் குஷி ஆனார்கள். இந்நிலையில் மாஸ்டர் திரைப்படம் சென்சார் போர்டுக்கு சான்றிதழுக்காக அனுப்பப்பட்டது.

அதனை பார்த்த குழுவினர், படம் வேற மாதிரி, வேற மாதிரி என ஆச்சர்யப்பட்டு போனார்களாம். நிறைய இடத்தில் எதிர்ப்பாராத ட்விஸ்ட் வைத்து அசத்திவிட்டாராம் லோகேஷ். படத்தின் ஆக்ஷன் காட்சிகளில் ரத்தம் சொட்ட சொட்ட காட்சிகள் இருப்பதால் இதற்கு A சர்டிஃபிகட் கொடுக்கப்பட்டதாகவும், ஆனால் படக்குழுவினர் U/A வேண்டுமென்று அவர்களிடம் கேட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே படம் ‘Fight club’ படத்தை போல இருக்கும் என யாரோ கெளப்பிவிட்ட புரளியால் எதிர்ப்பார்ப்பு எகிறும் நிலையில், இந்த செய்தி ரசிகர்களுக்கு இன்னும் புல்லரிக்க வைப்பது போல் உள்ளது. “இந்த பொங்கல் நமக்கு சூப்பர் கலெக்ஷன் மா” என போக்கிரியில் சொன்ன வசனத்தை இன்னும் செஞ்சு காட்டுகிறார், இளைய தளபதி விஜய்.