யூத்களுக்கு எடுத்துக்காட்டும், அப்பா – மகன் கதையில் சந்தானம்!

291

சந்தானம்…

சந்தானம் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் கும்பகோணத்தில் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் நடிகர் சந்தானம்.

கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் மூலம் ஹீரோவாக அவதாரம் எடுத்தார். அதன் பிறகு வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான், தில்லுக்கு துட்டு, சக்கபோடு போடு ராஜா, ஏ1, டகால்டி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

அண்மையில், சந்தானம் நடிப்பில் பிஸ்கோத் படம் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்றது. இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கத்தில் டிக்கிலோனா படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் சந்தானத்துடன் இணைந்து ஹர்பஜன் சிங், அனாகா, ஷெரின் காஞ்ச்வாலா, யோகி பாபு, ஆனந்தராஜ், நிழல்கள் ரவி, முனீஷ்காந்த், ராஜேந்திரன், ஷா ரா ஆகியோர் பலர் நடித்துள்ளனர். விரைவில் டிக்கிலோனா படம் திரைக்கு வரயிருக்கிறது.

இதே போன்று பாரிஸ் ஜெயராஜ் படமும் திரைக்கு வர தயாராகியுள்ளது. இந்தப் படத்தைத் தொடர்ந்து சந்தானம் அறிமுக இயக்குநர் ஆர் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் நேற்று கும்பகோணத்தில் தொடங்கப்பட்டுள்ளது. அப்பாவுக்கும், மகனுக்கும் உள்ள உறவை மையப்படுத்தி இந்தப் படம் உருவாக்கப்படுகிறது.

மேலும், அரசியல் சார்ந்த சில டுவிஸ்டுகளும் இந்தப் படத்தில் இடம்பெறும் என்று கூறப்படுகிறது. எம் எஸ் பாஸ்கர் சந்தானத்தின் அப்பாவாக நடிக்கிறார். புதுமுக நடிகை இந்தப் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். சாம் சி எஸ் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.

கும்பகோணம், திருச்சி, சென்னை ஆகிய பகுதிகளில் இந்தப் படம் படமாக்கப்படுகிறது. இந்தப் படம் குறித்து இயக்குநர் ஸ்ரீனிவாசன் கூறுகையில், சந்தானம் தான் இந்தக் கதைக்கு கச்சிதமாக பொருந்தியிருந்தார். காமெடி கலந்த படமாக இருந்தாலும், அப்பாவுக்கும், மகனுக்கும் இடையில் நடக்கும் கதை எனினும், ரசிகர்களிடையே உணர்ச்சி ரீதியான தொடர்பை கொண்டிருக்கும் என்று கூறியுள்ளார்.