ரசிகருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த வில்லன் நடிகர் சோனு சூட்!

477

சோனு சூட்…

சாலையோரத்தில் வைக்கப்பட்டுள்ள உணவகத்திற்கு சென்று சாப்பிட்ட வில்லன் நடிகர் சோனு சூட் தனது ரசிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

நாட்டையே உலுக்கிய கொரோனா லாக்டவுனில் தவித்த ஏழை, எளியவர்களுக்கும், புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் தன்னால் முடிந்த உதவிகளை செய்து ரியல் ஹீரோவாக மாறியுள்ளார் நடிகர் சோனு சூட்.

விஜயகாந்த் நடித்த கள்ளழகர் என்ற படத்தின் மூலம் தமிழி சினிமாவில் அறிமுகமானவர் சோனு சூட். இந்தப் படத்தைத் தொடர்ந்து தளபதி விஜய் நடித்த நெஞ்சினிலே படத்தில் நடித்தார். மேலும், சந்தித்த வேலை, மஜுனு, ராஜா, கோவில்பட்டி வீரலட்சுமி, சந்திரமுகி, ஒஸ்தி, சாகசம், தேவி, தேவி 2, அருந்ததி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

தற்போது தமிழில், தமிழரசன் என்ற படத்தில் நடித்து வருகிறார்தமிழைத் தவிர தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். ஒரு நடிகராக மட்டுமல்லாமல், தயாரிப்பாளராகவும், சிறந்த மனித நேயமிக்கவராகவும் திகழ்கிறார். உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா இந்தியாவிலும் தாக்கைத்தை ஏற்படுத்தியது. கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டது.

கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை சோனு சூட் செய்து வந்தார். புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அவர்கள் சொந்த ஊர் செல்வதற்கு பேருந்து வசதி செய்து கொடுத்தார்.

கொரோனா காலத்தில் இரவு பகலாக பணியாற்றி வந்த மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் ஆகியோர் பலரும் தங்கி ஓய்வெடுப்பதற்கு தனது 6 மாடி ஹோட்டலை கொடுத்தார்.

வேலையிழந்த பலருக்கும் வேலை கொடுத்துள்ளார். டிராக்டர் வசதி செய்து கொடுத்துள்ளார். ஏழை மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகையும் வழங்கியுள்ளார். இப்படி பல உதவிகளை செய்து மக்களிடத்தில் தனக்கென்று ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டுள்ளார்.

கொரோனா காலத்தில் சோனு சூட் செய்த இந்த மனிதாபிமானப் பணிகளுக்காக ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டத்தின் சார்பில் அவர் எஸ்டிஜி சிறப்பு மனிதாபிமான செயல் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்க்கது.

இப்படி தன்னால் முடிந்த உதவிகளை செய்த சோனு சூட், தனது ரசிகர் தொடங்கிய சாலையோர உணவகத்திற்கு சென்றுள்ளார். அந்த உணவகத்தில் சமைத்தும், அங்கு சாப்பிடவும் செய்துள்ளார். மேலும், அவர் வருவதை அறிந்த ஏராளமான ரசிகர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டுள்ளார்.

இது குறித்து சோனு சூட் கூறுகையில், அனில் என்பவரது உணவகத்தை நான் சமூக வலைதளங்கள் மூலமாகவே அறிந்தேன். இந்த உணவகத்தில் சாப்பிட வேண்டும் என்று விரும்பினேன். இன்று தான் அதற்கான வாய்ப்பு கிடைத்தது. இந்த உணவகத்தில் ஃப்ரைடு ரைஸ் மற்றும் கோபி மஞ்சூரியன் சாப்பிட்டேன் என்றார்.