சாமியார் ஜக்கி வாசுதேவை சந்தித்த திரிஷா : ஏன் தெரியுமா?

746

நடிகை திரிஷா

நடிகை திரிஷா சமூக, ஆன்மிக விஷயங்களில் ஆர்வம் காட்டுகிறார். யுனிசெப் அமைப்பில் நல்லெண்ண தூதராக இருந்து பெண் குழந்தைகள் பாதுகாப்புக்கு குரல் கொடுக்கிறார்.

பா லியல் வ ன்கொடு மையில் ஈடுபடுவோரை தண்டிக்க அரபு நாடுகளை போன்று கடுமையான சட்டங்களை இந்தியாவிலும் கொண்டுவர வேண்டும் என்றார்.

வெளியூர்களில் படப்பிடிப்புகள் நடக்கும்போது அருகில் உள்ள கோவில் கள் பற்றி விசாரித்து அறிந்து நேரில் சென்று வழிபடுகிறார். வாரணாசியில் ‘பேட்ட’ படப்பிடிப்பில் கலந்து கொண்டபோது காசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டார்.

இந்த நிலையில் தற்போது ஈஷா அறக்கட்டளை என்ற அமைப்பை தொடங்கி உலக நாடுகளில் யோகா நிகழ்ச்சிகளை நடத்தி வரும் சாமியார் ஜக்கி வாசுதேவை சந்தித்து ஆசி பெற்றுள்ளார்.

அவருடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்களையும் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், “ஆன்மிகம் என்பது ஒரு சிறப்பான விஷயம். அமைதியான தெய்வீகம் உள்ள ஆன்மிக குருவை சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது” என்று குறிப்பிட்டு உள்ளார்.

ஏற்கனவே தமன்னா உள்ளிட்ட சில நடிகைகள் ஈஷா மையத்துக்கு சென்று சிவராத்திரி விழாக்களில் பங்கேற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கர்ஜனை, பரமபத விளையாட்டு, ராங்கி, சுகர் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.