மாஸ்டர் பவானி கதாபாத்திரத்திற்கு முதலில் தேர்வு செய்யப்பட்டவர் இவரா? ஆத்தாடி! கொடூர வில்லன் ஆச்சே!

358

மாஸ்டர்…..

சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் விஜய்சேதுபதியின் பவானி கதாபாத்திரம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான்.

ஆறு மாதங்களாக ரிலீஸ் செய்ய முடியாமல் தடுமாறி வந்த மாஸ்டர் திரைப்படம் என்ன நடந்தாலும் சரி கடந்த பொங்கலுக்கு வெளியானது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் படம் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது.

நகரப்பகுதிகளில் மாஸ்டர் படம் ஓடியது பெரிய விஷயமல்ல. ஆனால் கிராமப்புறங்களில் உள்ள சின்ன சின்ன தியேட்டர்களிலும் மாஸ்டர் படம் ஒரு வாரத்திற்கும் மேலாக அனைத்து காட்சிகளும் ஹவுஸ்புல்லாக ஓடியது தான் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாஸ்டர் படத்திற்கு பிறகு விஜய் சேதுபதியின் மார்க்கெட் வேற லெவலில் உள்ளது. தெலுங்கில் விஜய் சேதுபதிக்கு வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கின்றன. அதேபோல் குட்டி பவனியாக நடித்த மாஸ்டர் மகேந்திரன் என்ற நடிகருக்கும் முன்னணி நடிகர்களின் பட வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன.

இப்படிப்பட்ட பவானி கதாபாத்திரத்திற்கு முதன்முதலில் தேர்வு செய்யப்பட்டவர் தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்கே சுரேஷ் தானாம். பாலா இயக்கிய தாரை தப்பட்டை படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமானார் ஆர்கே சுரேஷ்.

அதன் பிறகு தமிழ் சினிமாவில் உருவாகும் அனைத்து கிராமப்புற கமர்ஷியல் படங்களிலும் வில்லன் என்றால் அது ஆர்கே சுரேஷ் தான். ஆர்கே சுரேஷ் நடித்திருந்தாலும் பவானி கதாபாத்திரம் வேற லெவலில் இருந்திருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.