சூப்பர் ஹிட் படங்களில் நடித்தும் கண்டுகொள்ளாத ரசிகர்கள்.. கமலை வைத்து ஒரே படம், காணாமல் போன இயக்குனர்!!

519

ரமேஷ் அரவிந்து…….

தமிழ் சினிமாவில் 30 படங்களில் நடித்த ரமேஷ் அரவிந்துக்கு ஒரு சில படங்கள் மட்டுமே தமிழ் சினிமாவில் இவருக்கென தனி இடத்தை ஏற்படுத்திக் கொடுத்தன. அந்த வரிசையில் சதி லீலாவதி, பஞ்சதந்திரம், அவ்வை சண்முகி மற்றும் கண்டேன் சீதையை போன்ற படங்கள் இடம்பெற்றுள்ளன. அதிலும் குறிப்பாக கமல்ஹாசன் நடித்த படங்களில்தான் அதிகம் நடித்துள்ளார்.

அதிலும் குறிப்பாக ரமேஷ் அரவிந்த் அவரது மனைவியாக நடித்திருக்கும் கல்பனாவை பார்த்து குண்டுஸ் குண்டுஸ் என கூப்பிடுவார். அதற்கு கல்பனா நீ குண்டுஸ் குண்டுஸ் கூப்பிடும் போது செல்லமாக கூப்பிடுகிறார் என நினைத்தேன். இப்போது தான் தெரிகிறது என்னை நீ குண்டாக இருப்பதை கு த் தி கா ட்டு கிறீர்கள் என கூறும்

கமல்ஹாசன் நடிப்பில் நடித்த பஞ்சதந்திரம் இவருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடிக் கொடுத்தது. சினிமாவில் வெற்றி கண்ட ரமேஷ் அரவிந்திடம் எப்படி சினிமாவில் நடிப்பதற்கு ஆர்வம் வந்தது என கேட்கும்போது அதற்கு காரணம் கமல்ஹாசன் எனக் கூறியுள்ளார்.

மேலும் ராஜ் கமல் ஆபீஸில் தான் சதிலீலாவதி படத்திற்கு சம்பளமாக முதல் செக் வாங்கினேன் என தனது நண்பரான கமல்ஹாசன் பற்றி பெருமையாக கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட போவது தனது சி கிச் சைக்காக கமல்ஹாசன் முழு பணத்தையும் செலவிட்டு தனது உயிரை காப்பாற்றியதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் படத்தில் நடிக்கும் போது இயக்குனராக வேண்டும் என்ற ஆசையை தூண்டி விட்டவர் கமல்ஹாசன். அதனால தான் உத்தமவில்லன் படத்தை இயக்கியதாக தெரிவித்துள்ளார். அதற்கு பின் 4 வருடம் படம் இயக்கும் எண்ணமே சுத்தமா இல்லையாம்.

காஜல் அகர்வாலை வைத்து பாரிஸ் பாரிஸ் என்னும் பாடத்தை எடுத்து அதில் ஓரளவுக்கு இயக்குனராக வெற்றி பெற்றதாகவும் தெரிவித்துள்ளார்.