ஏ ஆர் ரஹ்மானின் உண்மையான பெயர் என்ன தெரியுமா.? இஸ்லாம் மதத்திற்கு மாறிய முக்கிய காரணம் இதோ …

413

ஏ ஆர் ரஹ்மான்…..

இந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்த இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மானுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் ஒரு தனி இடம் உண்டு. ஏ ஆர் ரஹ்மான் முதலில் இந்து மதத்தைச் சார்ந்தவராக இருந்துள்ளார், திலீப்குமார் என்பது தான் உண்மையான பெயர்.

திலிப் குமாரின் அப்பா ஆர்கே சேகர் இசையில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். ஆனால் ஏ ஆர் ரஹ்மான் 11 வயது இருக்கும் போதே இறந்துள்ளார்.

ஏ ஆர் ரஹ்மானுக்கு ஒரு அக்காவும், ஒரு தங்கச்சியும் இருந்துள்ளனர், வறுமையில் இருந்து தன் குடும்பத்தை காப்பாற்றுவதற்காக தனது அப்பா பயன்படுத்தி இசைக்கருவியை வாடகைக்கு விட்டு சம்பாதித்து வந்துள்ளார். இந்த வருமானத்தை வைத்து தான் இசையையும் கற்றுக் கொண்டுள்ளாராம்.

ஆன்மீகத்தில் அதிக விருப்பம் உள்ளவர் ஏ ஆர் ரஹ்மான். 1984ஆம் ஆண்டு ரஹ்மானின் தங்கைக்கு மிகவும் உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டதாம். அப்போது ஏ ஆர் ரஹ்மான் அம்மா கரி முல்லா ஷா கத்ரி என்பவரிடம் தனது குடும்ப சூழ்நிலையை பற்றி கூறியுள்ளார்.

அப்போது இஸ்லாமிய மதத்திற்கு மாறுங்கள் எனக் கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் ‘தி ஸ்பிரிட் ஆஃப் மியூசிக்’ இசையை கேட்டு ஏ ஆர் ரஹ்மானுக்கு இஸ்லாமிய மதத்தின் மீதான தா க் கம் ஏற்பட்டது. அதன் பிறகு தங்கையின் உடல் நிலையும் சரியானது.

அதன் பிறகு தான் 1989ஆம் ஆண்டு திலீப் குமார் என்ற இந்து பெயரை அல்லாஹ்ரக ஏ ஆர் ரஹ்மான் என மாற்றிக் கொண்டுள்ளார். தற்போது உலகளவில் ரசிகர்கள் கொண்டு பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார் திலீப் குமார் என்கிற ஏ ஆர் ரஹ்மான்.