தென்னிந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் 8 இயக்குனர்கள்! 52 கோடி சம்பளத்தில் முதலிடத்தை தட்டி தூக்கிய தமிழ் இயக்குனர்!! யார் தெரியுமா?

423

இயக்குனர்கள்……

ஒரு படம் உருவாக்குவதற்குத் தேவையான அனைத்து செயல்பாடுகளையும் மன ஓவியமாக தீட்டி அதனை தத்துரூபமாக படமாகும் பொறுப்புக் கூறியவர் தான் படத்தின் இயக்குனர்.

அப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த இயக்குனர்களின் கடின உழைப்பே படத்திற்கு கிடைக்கும் முழு வெற்றியாகக் கருதப்படும். எனவே தென்னிந்தியாவில் முன்னணி இயக்குனர்கள் யார் யார் மற்றும் அவர்களது சம்பளம் என்பதை அறிந்துகொள்ள சினிமா ரசிகர்கள் எப்பொழுதுமே ஆர்வம் காட்டுவார்கள். அந்த வகையில் தென்னிந்தியாவின் டாப் 8 இயக்குனர்களின் சம்பளத்தை பற்றிய விபரம் இதோ!

முதலிடம் இயக்குனர் ஷங்கர்: இவர் தனது சினிமா பயணத்தை, சாதாரண துணை இயக்குனராக எஸ்ஏ சந்திரசேகரிடம் பணியாற்றியதன் மூலம் துவங்கினார். அதன்பின் ஜென்டில்மேன் படத்தின் மூலம் இயக்குனரானார். அதைத்தொடர்ந்து சூப்பர் ஸ்டாருடன் சிவாஜி, எந்திரன் என பிளாக்பஸ்டர் படங்களின் மூலம் பட்டையை கிளப்ப தொடங்கிவிட்டார். தற்போது இவர் ஒரு படத்திற்கு 52 கோடி சம்பளம் வாங்கிக்கொண்டு இருக்கிறாராம்.

இரண்டாவது இடம் ஏஆர் முருகதாஸ்: தீனா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி, அதன் பின் ரமணா, கஜினி, துப்பாக்கி என தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார். தற்போது இவர் ஒரு படத்திற்கு 16 கோடி சம்பளம் வாங்கி வருகிறார்.

மூன்றாவது இடம் எஸ்எஸ் இராஜமௌலி: தொடக்கத்தில் தொலைக்காட்சித் தொடர்களை இயக்கிக் கொண்டிருந்த இராஜமௌலி, அதன்பின் தெலுங்கில் பல வெற்றிப் படங்களை இயக்கிய பெருமைக்குரியவர். அதன்பின் தமிழில் நான் ஈ, பாகுபலி சீரிஸ் மூலம் பிரம்மாண்டமான இயக்குனராக உருவெடுத்துள்ளார். தற்போது இவர் ஒரு படத்திற்கு 14 கோடி சம்பளம் வாங்கி வருகிறாராம்.

நான்காம் இடம் மணிரத்னம்: தமிழ் திரையுலகில் 80களில் மாறுபட்ட தத்ரூபமான இயக்குனராக திகழ்ந்தவர் மணிரத்னம். இவர் மாறுபட்ட கதை அம்சம் கொண்ட காதல், தீவிரவாதம் ஆகியவற்றை நகர்புற வாழ் நடுத்தர மக்களின் பின்புலத்தில் தனது படங்களை இயக்குவதன் மூலம் தனித்துவம் பெறுவார். மேலும் இவருடைய படங்களில் இருக்கும் நேர்த்தியான தொழில்நுட்பமும், திரைக்கதையும். சுருக்கமான வசனங்களும் பெயர்பெற்றது, எனவே இவர் ஒரு படத்திற்கு வாங்கிய சம்பளம் 5 கோடியாம்.

ஐந்தாவது இடம் கேஎஸ் ரவிக்குமார்: இயக்குனர் விக்ரமனிடம் துணை இயக்குனராக பணியாற்றி, அதன்பின் ‘புரியாத புதிர்’ என்ற படத்தின் மூலம் இயக்குனரானார். பெரும்பாலும் இவர் இயக்கும் படங்களில் ஓரிரு காட்சிகளில் தோன்றி நடிப்பதையும் வழக்கமாக கொண்டிருப்பார். மேலும் வசூல் ரீதியில் பெரும் வரவேற்ப்பை இவருடைய படங்கள் பெறுவது வழக்கம். எனவே இவர் ஒரு படத்திற்கு சம்பளமாக 5 கோடி வாங்குகிறார்.

ஆறாவது இடம் கேவி ஆனந்த்: திரைப்படம் ஒளிப்பதிவாளராக இருந்து, அதன்பின் ‘கனா கண்டேன்’ என்ற படத்தின் மூலம் இயக்குனரானவர் தான் கேவி ஆனந்த். அதன்பின் அயன், கோ போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கியதன் மூலம் சிறந்த இயக்குனராக பெயர் பெற்றார். குறிப்பாக இவர் ஷங்கர் இயக்கிய ‘முதல்வன்’ படத்தில் ஒளிப்பதிவாளராக தனது திறமையை பிரம்மாண்டமாக படைத்திருந்தது அனைவருடைய பாராட்டுக்களையும் பெற்றுத் தந்தது. எனவே இவர் ஒரு படத்திற்கு சம்பளமாக 5 கோடி வாங்குகிறார்.

ஏழாவது இடம் கொரடலா சிவா: 2013ஆம் ஆண்டு பிரபாஸ் நடிப்பில் வெளியான ‘மிர்ச்சி’ என்ற தெலுங்கு படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தான் கொரடலா சிவா. அதன்பின் ஜனதா கேரேஜ் (janatha garage) என்ற சூப்பர் ஹிட் மலையாள படத்தை இயக்கியதன் மூலம் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்தார். எனவே இவர் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் 4 கோடியாம்.

எட்டாவது இடம் இயக்குனர் ஹரி: தமிழ் சினிமாவின் அதிரடி மசாலா படங்களுக்கு பெயர் போனவர் தான் இயக்குனர் ஹரி. கடந்த 2011 வரை கிட்டத்தட்ட 12 படங்களை இயக்கி உள்ளார். குறிப்பாக சிங்கம், சாமி சீரிஸ் இவருடைய பிரம்மாண்டத்தின் உச்சக்கட்டம். இவர் ஒரு படத்திற்கு 4 கோடி சம்பளம் வாங்குவாராம்

எனவே தென்னிந்தியாவின் பிரபல இயக்குனர்கள் யார் யார் எவ்வளவு சம்பளம் வாங்குவார்கள் என்ற தகவல்களை அவர்களுடைய ரசிகர்கள் ஆர்வத்துடன் தெரிந்து கொள்கின்றனர்.