முதல் தேசிய விருது வாங்கிய தமிழ் நடிகை யார் தெரியுமா?

530

சினிமா………

சினிமாவைப் பொருத்தவரை நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் அதிகம் எதிர்பார்ப்பது படத்தின் வசூல் மற்றும் விருதுதான். படத்தின் பெருமையை எடுத்துக்காட்டுவது அந்த படத்திற்கு கிடைக்கும் விருது வைத்துதான்.

ஒரு சில இயக்குனர்கள் நல்ல கதை மக்களுக்கு சொல்ல வேண்டுமென படத்தை எடுப்பார்கள். ஆனால் ஒரு சில இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் அவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக விருது வாங்கக்கூடிய படங்களில் நடிக்கவும் இயக்கவும் செய்வார்கள்.

இந்திய சினிமாவில் மிகப்பெரிய விருதாக கருதப்படுவது தேசிய விருது தான். சமீபகாலமாக பல நடிகர்கள் தங்கள் திறமையை நிரூபித்து தேசிய விருதை குவித்து வருகின்றன.

1966 ஆம் ஆண்டு நேஷனல் அவார்டு எனும் விருது முதல்முதலாக அறிமுகம் செய்யப்பட்டது. அதற்கு முன்பு இந்த மாதிரியான எந்த ஒரு விருதும் யாருக்கும் வழங்கப்பட்டதில்லை தேசிய விருது ஆரம்பித்ததிலிருந்து கிட்டத்தட்ட 10 வருடமாக எந்த ஒரு தமிழ் நடிகைக்கும் வழங்கப்படவில்லை. பின்பு 1976-ல் சில நேரங்களில் சில மனிதர்கள் என்ற படத்திற்காக ஒரு பெண்மணிக்கு தேசிய விருது கிடைத்தது.

ஜெயகாந்தன் அவர்களின் நாவலை தழுவி எடுக்கப்பட்ட படம். இதில் நடிகை லட்சுமி அவர்கள் நன்றாக நடித்ததால் அவருக்கு தேசிய விருது கொடுக்கப்பட்டது. தமிழ் சினிமாவில் தேசிய விருது வாங்கிய முதல் பெண்மணி என்ற பெருமையை பெற்றார்.

அதன்பிறகு தொடர்ந்து நடிகர் மற்றும் நடிகைகள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி தேசிய விருதை வாங்கி வருகின்றனர்.