புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்த சினேகாவின் நச் கிளிக்ஸ்!!

3186

சினேகா..

ரசிகர்களால் புன்னகை அரசி என அழைக்கப்பட்டவர் சினேகா. குடும்ப பாங்கான வேடத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். தமிழ் மற்றும் தெலுங்கில் பல படங்களில் நடித்தார்.

மாதவன் நடித்த என்னவளே என்கிற படம் மூலமாகத்தான் அறிமுகமானார். ஆனால், பிரசாந்துக்கு ஜோடியாக அவர் நடித்த விரும்புகிறேன் திரைப்படம் ரசிகர்களிடம் அவரை நெருக்கமாக்கியது.

அதன்பின் ஆனந்தம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். இவருக்கென தனி ரசிகர் கூட்டமும் உருவானது, விஜய், அஜித், சிம்பு, தனுஷ் உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்தார்.  புதுப்பேட்டை திரைப்படத்தில் விலை மாது வேடத்தில் சிறப்பான வேடத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். சமீபகாலமாக இன்ஸ்டாகிராமில் அழகான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை திணறடித்து வருகிறார்.

மேலும், உடல் எடையை குறைத்து பழைய அழகுக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில்,வழக்கமாக புடவையில் போஸ் கொடுக்கும் சினேகா ஜீன்ஸ் பேண்ட்,சர்ட்டை அணிந்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.