அட்டை படத்திற்கு அம்சமா போஸ் கொடுத்த ரெபா மோனிகா ஜான்!!

1639

ரெபா மோனிகா ஜான்..

மலையாள நடிகையான ரெபா மோனிகா ஜான் பிகில் திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இவர் ஜெய்யின் ஜருகண்டி படம் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார்.

அதன் பின்னர் தான் அட்லீ இயக்கிய பிகில் படத்தில் கால்பந்து வீராங்கனையாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். அந்த படத்தில் இவரது ரோல் தான் மிகவும் அழுத்தமானதாக இருந்தது.

ஆம் அப்படத்தில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண் வேடத்தை ஏற்று நடித்த ரெபா ஜான் மூலமாக தான் சிங்கப்பெண்ணே பாடலும் ஒலிக்க ஆரம்பிக்கும். அதன் பின்னர் பிக்பாஸ் பிரபலம் ஹரீஷ் கல்யாண் ஹீரோவாக நடித்த தனுசு ராசி நேயர்களே படத்தில் ஹீரோயினாக நடித்து அசத்தினார்.

தொடர்ந்து எப்ஐஆர் உள்ளிட்ட படங்களில் நடித்தார். இந்நிலையில் தற்போது மாத இதழ் அட்டைப்படமொன்றிற்கு அழகு தேவதையாக போஸ் கொடுத்து லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் அள்ளியுள்ளார்.