ஆளை மயக்கும் அழகில் அனுபமா பரமேஸ்வரன்… ஜொள்ளு விடும் ரசிகர்கள்!!

976

அனுபமா..

சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை அனுபமா பரமேஸ்வரன் தன்னுடைய சமீபத்திய புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான பிரேமம் திரைப்படத்தில் நடித்த மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்திருந்தார் அனுபமா பரமேஸ்வரன். முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார் அம்மணி. பிரேமம் திரைப்படத்தின் வெற்றி இவரை தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவிற்கு கொண்டு வந்து சேர்த்தது.

தமிழில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான கொடி படத்தின் ஹீரோயினாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து சில படங்களில் நடித்தார். ஆனால், தமிழ் சினிமா இவருக்கு பெரும் வரவேற்ப்பை கொடுக்கவில்லை என்பதுதான் உண்மை. ஆனால் தெலுங்கு சினிமாவின் இவருக்கு நல்ல வரவேற்பு இருக்கின்றது.

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வரும் இவர் சமூக வலைதளங்களில் மும்முரமாக அந்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றார். அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் மதுரமல்லி மாதிரி கும்முனு.. ஆளை மயக்குறியே.. என்று ஜொள்ளுவிட்டு வருகின்றனர்