பாத்து பத்திரமா வேலை செய்யுங்க.. சமந்தா செய்த காரியத்தால் ஆடிப்போன ரசிகர்கள்!!

682

சமந்தா..

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் கலக்கி வரும் சமந்தா தற்போது பல பெரிய பட்ஜெட் படங்களில் நடிக கமிட் ஆகியுள்ளார். புஷ்பா படத்தில் இடம்பெற்றிருந்த ஊ சொல்றீயா மாமா பாடலில் நடனம் செய்த பிறகு இவரது மார்க்கெட் எங்கேயோ போய்விட்டது என்றே கூறலாம்.

இதனால் என்னவோ, இவருக்கு பல பெரிய படங்களில் நடிக்க வாய்ப்பு வருகிறது. இவரது நடிப்பில் பல படங்கள் தயாராகி வருகிறது. அதில் ஒன்று “யசோதா”. இந்த படத்தை ஹரி, ஹரிஷ் என இருவர் இணைந்து இயக்கியுள்ளார்கள்.

படத்தில் சமந்தாவுடன், வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். வரும் ஆகஸ்ட் 12-ஆம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

அதிரடி ஆக்சன் காட்சிகள் கொண்ட இந்த படத்தின் படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனையடுத்து, படத்தில் ஒரு முக்கியமான சண்டைக்காட்சியை டூப் போடாமல் சமந்தாவே செய்துள்ளாராம். படக்குழு இந்த காட்சி மிகவும் ஆபத்தானது,

அதனால் டூப் வச்சி பண்ணிக்கலாம் என்று சொல்லியும் சமந்தா கேட்கவில்லையாம். இந்த காட்சியை நானே நடிக்கிறேன், டூப் எல்லாம் வேண்டாம், என துணிந்து தனது உயிரை பணயம் வைத்து அந்த காட்சியை நடித்து முடித்துக்கொடுத்துள்ளாராம்.

இந்த செய்தி சமந்தா ரசிகர்களை பதறவைத்துள்ளது, இதனையடுத்து, பாத்து பத்திரமா வேலை செய்யுங்க மேடம் என அவரது ரசிகர்கள் அறிவுரை கூறி வருகிறார்கள்.