செதுக்கி வைத்த சிலை.. முன்னழகை எடுப்பாக காட்டி திணறடிக்கும் ராஷ்மிகா மந்தன்னா!!

2741

ராஷ்மிகா மந்தன்னா..

இந்திய சினிமாவின் முன்னணி யில் உள்ள ஆடை வடிவமைப்பாளர்கள் அவர்கள் வடிவமைத்த சிறந்த ஆடைகளை ஒவ்வொரு ஆண்டும் கவுச்சர் வீக் (Couture Week) என்ற நிகழ்ச்சியில் மாடல் அழகிகளுக்கு உடுத்தி ரசிகர்களின் கண்களுக்கு அறிமுகம் செய்வார்கள்.

அதேபோன்று இந்த ஆண்டு டெல்லியில் கடந்த மாதம் ஜூலை 22ஆம் தேதி தொடங்கிய இந்தியன் கவுச்சர் வீக் 2022-ல் பிரபல ஆடை வடிவமைப்பாளர்கள் ராகுல் மிஸ்ரா மற்றும் ஜேஜே வளையா மற்றும் வருண் பால் ஆகியோர் தங்களுடைய இந்த வருடத்திற்கான சிறந்த உடைகளை மாடல்களுக்கு அணிவித்து மேடையில் பூனை நடை போட வைத்தனர்.

இந்த வரிசையில் ஆடை வடிவமைப்பாளர் வருண் பால் வடிவமைத்த சிவப்பு நிற லெஹங்கா உடையை அணிந்துகொண்டு நடிகை ராஷ்மிகா மந்தனா பூனை நடை போட்டார். சினிமா மற்றும் விளம்பரம் என பிசியாக இருந்தாலும் தன்னுடைய சினிமா பிரவேசத்திற்கு துணையாக நின்ற மாடலிங்கை இன்னும் தொடர்ந்து செய்து வருகிறார் நடிகை ராஷ்மிகா.

அந்த வகையில் இந்த ஆண்டு கவுச்சர் வீக்கில் கலந்துகொண்டு பூனை நடை போட்டார் அம்மணி. மேலும் இந்த உடையை அணிந்து கொண்டு நடந்தது எனக்கு புதிய அனுபவமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது என பதிவு செய்த ராஷ்மிகா இந்த உடையை அணிந்து கொண்டிருக்கும் பொழுது எனக்குள் பட்டாம்பூச்சிகள் பறப்பது போல உணர்வதாகவும் எனக்கு இது சிறந்த அனுபவமாகவும் இருந்தது எனக் கூறுகிறார்.

இந்நிலையில் இந்த சிவப்பு நிற லெஹெங்கா உடையில் இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தங்கம் மினுமினுக்க போல அமர்ந்திருக்கும் ராஷ்மிகா மந்தனா இந்த சிகப்பு நிற லெஹெங்கா உடையில் செதுக்கி வைத்த சிலை போல காட்சியளிக்கிறார் என்று அவருடைய ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.