50 வயசுலயும் இப்படியா? கஜோல் புகைப்படத்தை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்!!

17789

கஜோல்..

தமிழில் நடிகர் பிரபுதேவாவுக்கு ஜோடியாக கடந்த 1997ஆம் ஆண்டு தமிழில் வெளியான மின்சார கனவு என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை கஜோல். அதன் பிறகு தமிழ் சினிமாவில் இருந்து விலகி விட்ட இவர் தொடர்ந்து இந்தியில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருந்தார்.

திருமணம் செய்துகொண்டு திருமண வாழ்க்கையில் செட்டிலாகி விட்ட இவரை தனக்கு வில்லியாக நடிக்கும் படி அழைத்து வந்தார் நடிகர் தனுஷ். வேலையில்லா பட்டதாரி இரண்டாம் பாகத்தில் கஜோல் வில்லியாக நடித்திருந்தார். முன்னணி நடிகையாக இருக்கும் பொழுது சக நடிகர் அஜய் தேவ்கானை காதலித்து திருமணம் செய்து கொண்ட கஜோல்

தற்போது இரண்டு குழந்தைகளுக்கு தாயாகி உள்ளார். திருமணத்திற்கு முன்பே அஜய்தேவ்கான்-உடன் மூன்றாண்டுகளுக்கு மேலாக சேர்ந்து வாழ்ந்து வந்தவர் நடிகை கஜோல் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருகட்டத்தில் இருவரும் திருமணம் செய்து கொண்ட கணவன் மனைவியாகவும் மாறினார்கள்.

தமிழில் நடிகை நயன்தாரா போல ஹிந்தியில் நடிகை கஜோல் பல காதல் சர்ச்சைகளில் சிக்கி உள்ளார். தற்பொழுதும் சினிமாவில் பிசியாக நடித்து வரும் நடிகை கஜோல் சமீபத்தில் தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றபோது அங்கே நீச்சல் உடையில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.