முதன் முறையாக நீச்சல் உடையில் நடிகை கீர்த்தி சுரேஷ்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

8687

கீர்த்தி சுரேஷ்..

நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடைசியாக தெலுங்கில் வெளியான திரைப்படம் சர்க்காரு வாரி பாட்டா. தற்போது கைவசம் மூன்று தெலுங்கு படங்கள் வைத்துள்ள நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் மற்றும் மலையாளத்தில் புதிய பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருக்கின்றார்.

பட வாய்ப்புகளை கைப்பற்றுவதில் அதிக ஆர்வம் காட்டி வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்ற கொள்கையை தற்போது தளர்த்தி உள்ளார். அதனை தன்னுடைய கடைசி தெலுங்கு படமான சர்க்காரு வாரி பாட்டா படத்திலேயே காட்டினார்.

மகேஷ்பாபு ஹீரோவாக நடித்திருந்த அந்த படத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சி காட்டி நடித்து இருந்தார் நடிகை கீர்த்தி சுரேஷ். அதுவும் பாடல் காட்சிகளில் கவர்ச்சி தாண்டவம் ஆடினார் அம்மணி.

தொடர்ந்து குடும்ப பாங்காக இழுத்துப் போர்த்திக் கொண்டு நடித்தால் சினிமாவில் இருந்து துரத்தி விடுவார்கள் என்பதை உணர்ந்து கொண்ட கீர்த்தி சுரேஷ் சமீபகாலமாக கவர்ச்சியான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார்.

இந்நிலையில் வெப்சீரிஸ் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ். முதன் முறையாக நீச்சல் உடையில் சில காட்சிகளில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார் என்று கூறுகிறார்கள்.

இது குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும் நடிகை கீர்த்தி சுரேஷ் நீச்சல் உடையில் நடிக்க உள்ளார் என்ற தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

முன்னதாக மார்க்கெட் சரியும் இருக்கும் நிலையில் இருக்கும் நடிகைகள் பலரும் படு சூடான காட்சிகளில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மீண்டும் தங்களது பெயரை பதிவு செய்கிறார்கள்.

அதிலும் பெரும்பாலான நடிகைகள் நீச்சல் உடையில் நடிப்பது ஹீரோவுடன் நெருக்கமான காட்சிகளில் நடிப்பது உள்ளிட்ட வேலைகளை செய்து வருகிறார்கள்.

அந்த வகையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது நீச்சல் உடையில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறுகின்றனர். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.