ஒரே ஒரு போஸில் ஒட்டு மொத்த இளசுகளையும் சாய்த்த பிரியங்கா மோகன்!!

1761

பிரியங்கா மோகன்..

பிரபல தெலுங்கு நடிகர் நானி நடிப்பில் வெளியான கேங் லீடர் என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை பிரியங்கா மோகன். முதல் படத்திலேயே தன்னுடைய அழகாலும் நடிப்பாலும் ரசிகர்களை தனக்கான இடத்தை பிடித்தார். அதன் பிறகு நடிகர் சர்வானந்த் நடித்த விக்ரம் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் இந்த படமும் இவரது ஹிட் படமாக அமைந்தது.

தமிழில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் என்ற திரைப்படத்தில் தன்னுடைய அருமையான நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தமிழில் இவர் நடித்த முதல் திரைப்படம் இவரை பட்டிதொட்டியெங்கும் பிரபலமாக்கியது. இந்த படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்துமே ரசிகர்களை கவரும் விதமாக இருந்தது.

அதனைத் தொடர்ந்து நடிகர் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த திரைப்படம் இவருக்கு தோல்வியை கொடுத்தது. அதனைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் என்ற திரைப்படத்தில் மீண்டும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து தன்னுடைய மார்க்கெட்டை நிலைப்படுத்தினார். தொடர்ந்து முன்னணி கதாநாயகிகளில் ஹீரோவாக ஹீரோயினாக நடித்துவரும் பிரியங்கா மோகன்

நெல்சன் இயக்கத்தில் உருவாக உள்ள ஜெயிலர் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் புடவை சகிதமாக இவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் மெழுகு சிலை.. அழகு… தங்கமே.., ஒருநாள் உன்ன தூக்குவேனே என்று பாடல் பாடி வர்ணித்து வருகின்றனர்.