ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் புடவை சகிதமாக போஸ் கொடுத்து இளசுகளை வசியம் பண்ணும் வந்தனா!!

1718

வந்தனா மைக்கேல்..

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மகராசி என்ற சீரியலில் வில்லியாக நடிக்கவுள்ளார் நடிகை வந்தனா மைக்கேல். நடிகை வந்தனாவை யாராலும் அவ்வளவு எளிதாக மறக்க முடியாது.

பிரபலமாக ஹிட்டடித்த பல சீரியல்களில் வில்லியாக நடித்து அதகளம் செய்தவர் அம்மணி. ஆனால், இவருடைய திரைப் பயணம் ஆரம்பமானது. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆனந்தம் சீரியல் தான். அதன்பிறகு காதல் முதல் கல்யாணம் வரை சீரியலில் வில்லியாக நடித்து ரசிகர்களை மிரட்டினார்.

மெல்ல திறந்தது கதவு என்ற சீரியலிலும் வில்லியாகவே நடித்து அசர வைத்தார். பார்ப்பதற்கு ஹீரோயின் மெட்டீரியல் போல இருந்தாலும் வில்லியாக தனது நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை அதிர வைக்கிறார்.

இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு மகராசி சீரியலில் வில்லியாக நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்த சீரியலில் ரியாஸ்கான் நடித்து வருகிறார் அவருக்கு ஜோடியாக வில்லி கதாபாத்திரத்தில் வந்தனா மைக்கேல் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீரியலில் புடவை சகிதமாக தோன்றும் வகையில் இணையத்தில் கவர்ச்சி குதிரையாக வலம் வருகிறார். அந்த வகையில் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் புடவை சகிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்