என்ன ட்ரெஸ் இது? கவர்ச்சி உடையில் அனசுயா பரத்வாஜ்… கலாய்க்கும் ரசிகர்கள்!!

2126

அனசுயா பரத்வாஜ்..

என்ன ட்ரெஸ் இது கோயில் உண்டி சுற்றி வைத்திருக்க மாதிரி என்று நடிகை அனசுயா பரத்வாஜ் வெளியிட்டுள்ள புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள். தொகுப்பாளினியாக தெலுங்கு தொலைக்காட்சிகளில் பணியாற்றி வந்த அனசுயா பரத்வாஜ்

சமீப காலமாக திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் நடிகர் ராம்சரண் சமந்தா நடிப்பில் வெளியான ரங்கஸ்தலம் திரைப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நடிகர் ராம்சரண் கதாபாத்திரத்திற்கு அத்தை என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படத்திற்கு பிறகு சினிமா ரசிகர்களின் கவனம் அவர் மீது விழுந்தது மட்டுமில்லாமல் வெற்றிபெற்ற துணை நடிகையாகவும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார் அம்மணி.

சமீபத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படத்தில் வில்லனுக்கு மனைவியாக நடித்து இருந்தார். வில்லனை விடவும் படுபயங்கர வில்லத்தனமான காட்சிகள் இவருக்கு கொடுக்கப்பட்டிருந்தது. புஷ்பா இரண்டாம் பாகத்திலும் இவருக்கு வெயிட்டான வில்லத்தனமான காட்சிகள் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

மறுபக்கம் இளம் நடிகர்களுக்கு இணையான கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வரும் இவர் தற்போது மஞ்சள் நிறத்திலான ஒரு உடையை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் எந்த டிரஸ் இது கோயில் உண்டியல் சுத்தி வச்சிருக்க மாதிரி.. என்று கலாய் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.