நான் நடிக்க வரலைனா.. இந்த தொழில் தான் செய்திருப்பேன்.. ஓப்பனாக கூறிய நிதி அகர்வால்!!

3628

நிதி அகர்வால்..

நடிகர் சிலம்பரசனுக்கு ஜோடியாக ஈஸ்வரன் என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை நீதி அகர்வால் தற்போது உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக புதிய படமொன்றில் நடித்து வருகிறார். மேலும் நடிகர் ஜெயம்ரவி நடிப்பில் வெளியான பூமி என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார் நடிகை நிதி அகர்வால்.

ஆனால் இந்த பூமி திரைப்படம் ரசிகர்களை கவர தவறிவிட்டது என்று தான் கூற வேண்டும். தற்போது தமிழ் படங்களில் நடிக்க வேண்டும் என்பதற்காக சென்னையில் தங்கியிருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய ரசிகர்களுடன் நேரலையில் கலந்துரையாடுவது வழக்கமாக கொண்டிருக்கிறார். மேலும் உடற்பயிற்சி செய்வது கவர்ச்சியான உடையணிந்து கொண்டு போஸ் கொடுப்பது

உள்ளிட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியிட்டு தன்னை ஆக்டிவாக வைத்துக் கொண்டிருக்கிறார் நிதி அகர்வால். சமீபத்தில் ரசிகருடன் கலந்துரையாடிய இவர் உடற்பயிற்சி செய்வது மற்றும் யோகா செய்வது ஆகியவற்றில் நான் மிகவும் ஆர்வத்துடன் ஈடுபடுவேன் என்று கூறியிருந்தார்.

அப்போது அவரிடம் நீங்கள் நடிக்க வரவில்லை என்றால் என்ன ஆகி இருப்பீர்கள்…? என்ன செய்திருப்பீர்கள்..? என்று ஒரு கேள்வியை ரசிகர் ஒருவர் எழுப்பினார். நான் சினிமாவுக்கு வரவில்லை என்றால் சம்பாதிக்க ஏதாவது ஒரு வேலையை செய்திருக்க வேண்டும். தற்பொழுது நான் சினிமாவில் ஜெயித்திருப்பதால் என்னுடைய வீட்டில் என்னை எதுவும் கேள்வி கேட்காமல் இருக்கிறார்கள்.

ஒருவேளை சினிமாவில் நான் தோற்று இருந்தால்.. நிச்சயமாக என்னுடைய வீட்டில் என்னை அனுமதித்திருக்க மாட்டார்கள். வேற ஏதாவது வேலைக்குப் போ என்று தான் கூறி இருப்பார்கள். என்னை பொறுத்தவரை நான் நடிகை ஆக வில்லை என்றால் பேஷன் பிராண்ட் ஒன்றை தொடங்கி இருப்பேன். பொதுவாகவே எனது ஆடை வடிவமைப்பு மற்றும் அழகு சார்ந்த துறையில் கொஞ்சம் அதிக ஆர்வம் அதிகம்.

பேஷன் டிசைனிங் படித்துவிட்டு முறையான பயிற்சி எடுத்துக்கொண்டு என் தொழிலை ஆரம்பித்திருப்பேன். என்னுடையது ஒட்டுமொத்த குடும்பமே தொழில் துறையை சார்ந்த குடும்பம்தான். எனவே அந்த தொழில் சார்ந்த அனுபவங்களும், அது சார்ந்த அறிவும் இருக்கின்றது. அதனை நிச்சயமாக என்னுடைய தொழிலிலும் புகுத்தி பயன்படுத்தி இருப்பேன் என்று கூறியிருக்கிறார் நடிகை நிதி அகர்வால்.