பரியேறும் பெருமாள் படத்தில் ஜோடியாக நடித்த கதிர் – ஆனந்தி, விரைவில் புதிய படத்தில் மீண்டும் இணைந்து நடிக்க உள்ளார்களாம்.
அட்டக்கத்தி, மெட்ராஸ், காலா, கபாலி என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் பா.இரஞ்சித்.
இவர் தயாரிப்பாளராக அறிமுகமான படம் ‘பரியேறும் பெருமாள்’. மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. பல்வேறு விருதுகளையும் வென்றது.
இதில் கதிர் நாயகனாகவும், ஆனந்தி நாயகியாகவும் நடித்திருந்தார்கள். இப்படத்தில் இவர்களின் நடிப்பு பெரிதும் பாரட்டப்பட்டது. இருவருக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகி இருந்தது படத்திற்கு பலமாக அமைந்தது.
இந்நிலையில், அவர்கள் இருவரும் மீண்டும் ஒரு புதிய படத்தில் ஜோடியாக நடிக்க உள்ளார்களாம். இப்படத்தை இளம் இயக்குனர் ஒருவர் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிவகார்த்திகேயனை வளர்ந்து வரும் நடிகர் என்று கூறிக் கொண்டிருந்த திரையுலகம் ரஜினி-கமல், அஜித்-விஜய், சிம்பு-தனுஷ் வரிசையில் சிவகார்த்திகேயன்-விஜய் சேதுபதியை சேர்த்து அவரை பெரிய நடிகர் லிஸ்டில் சேர்த்து விட்டது.
தனக்கென குழந்தைகள் உட்பட ஃபேமிலி ஆடியன்ஸை தன் பக்கம் ஈர்க்க செய்ததே இதற்கு காரணம்.
அதுமட்டுமில்லாமல் விஜய்யின் வழி செல்கிறார் என கூற்றுக்கு உண்மை சேர்க்கும் வகையில் ஏ ஆர் முருகதாஸ் விஜய்க்காக எழுதப்பட்ட ஸ்கிரிப்ட்டில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தளபதியின் 65 அவது திரைப்படத்தை இயக்கவிருந்த முருகதாஸ் ஒரு சில பிரச்சினைகளால் படத்தில் இருந்து விலகினார். அதனால் இந்த வாய்ப்பு கோலமாவு கோகிலா படத்தின் இயக்குனர் நெல்சனுக்கு கிடைத்தது.
இதனால் பழம் நழுவி பாலில் விழுந்தது போல விஜய்க்காக எழுதப்பட்ட ஸ்கிரிப்டில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருப்பது பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கி உள்ளது.
இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் புத்தாண்டு அன்று அறிவிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிருத்விராஜ், பிஜு மேனன் நடித்து மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான திரைப்படம், அய்யப்பனும் கோஷியும். மறைந்த இயக்குனர் சச்சி இயக்கி இருந்த இந்தப் படம் திரை ரசிகர்களை பெரிதளவில் கவர்ந்தது. பிருத்விராஜ் முன்னாள் ராணுவ வீரராகவும் பிஜூ மேனன் சப் இன்ஸ்பெக்டராகவும் நடித்திருந்தனர். ரஞ்சித், கவுரி நந்தா, அன்னா ராஜன், அணில் நெடுமங்காடு உட்பட பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் ஓடிக் கொண்டிருந்தபோதுதான் கொரோனா பரவல் தீவிரமடைந்தது.
அதிகாரப் பின்னணி கொண்ட ஒருவனுக்கும் ஆதிவாசிப் பகுதியைச் சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டருக்குமான ஈகோ மோதல்தான் படத்தின் கதை. படத்தை எவ்வளவு இயல்பாக கொடுக்க முடியுமோ, அவ்வளவு யதார்த்தமாக எடுத்திருந்தார்கள். இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை, தயாரிப்பாளர் பைவ் ஸ்டார் கதிரேசன் வாங்கியுள்ளார். இவர், பொல்லாதவன், ஆடுகளம், ஜிகிர்தண்டா உட்பட சில படங்களைத் தயாரித்தவர்.
தமிழ் ரீமேக்கில் நடிகர் சசிகுமார் ஒரு கேரக்டரில் நடிக்கிறார். மற்றொரு கேரக்டரில் நடிப்பவர் முடிவாகவில்லை என்று தயாரிப்பாலர் கதிரேசன் கூறியிருந்தார். இந்நிலையில் தெலுங்கு ரீமேக் உரிமையை, சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் பெற்றிருக்கிறது. இதில் பவன் கல்யாண் மற்றும் ராணா நடிப்பது உறுதியாகி இருக்கிறது.
பிருத்விராஜ் கேரக்டரில் ராணாவும், பிஜு மேனன் கேரக்டரில் பவன் கல்யாணும் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. சாகர் சந்திரா படத்தை இயக்குகிறார். இவர் இதற்கு முன், அப்பட்லோ ஒகடுண்டவடு என்ற படத்தை இயக்கி இருந்தார். தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். பிரசாத் முரெல்லா ஒளிப்பதிவு செய்கிறார். நவின் நூலி படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார்.
இந்நிலையில் படக்குழுவினர் ராணா டகுபதியை வரவேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இரண்டு உச்ச நட்சத்திரங்கள் ஒரே படத்தில் நடிப்பதை காண ஆவலில் உள்ளனர் திரை விரும்பிகள். வக்கீல் சாப் படத்திற்கு பவன் கல்யாண் நடிக்கும் இந்த படத்தில் நடிப்பதால் குஷியில் உள்ளனர் அவரது ரசிகர்கள்.
ராணா கைவசம் காடன் திரைப்படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய 3 மொழிகளில் உருவாகியுள்ளது. ராணாவுடன் இணைந்து விஷ்ணு விஷால், புல்கிட் சாம்ராட், சோயா ஹுசைன், அஸ்வின் ராஜா, டின்னு ஆனந்த் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஈராஸ் நிறுவனம் தயாரித்த இந்த படம் பொங்கல் 2021-ல் திரைக்கு வருகிறது.
Another Journey begins!! What joy this is, been able work with so many stars across industries!! And now joining the coolest back home Our very own Power ⭐️ @PawanKalyan !! Can’t wait thank you @SitharaEnts!! https://t.co/rMgae4Bltj
சைக்கோ படத்தின் வெற்றியை தொடர்ந்து மிஷ்கின் இயக்கி வரும் திரைப்படம் பிசாசு 2. இப்படத்தின் பணிகள் பூஜையுடன் இம்மாதம் தொடங்கியது. ராக்போர்ட் என்டர்டெய்ன்மென்ட் தயாரிக்கும் இப்படத்தில் ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.
பிரபல இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா மீண்டும் களமிறங்க, சிவா சாந்தகுமார் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கின்றார். சவரக்கத்தி பட புகழ் நடிகை பூர்ணாவும் இந்த படத்தில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
2014-ல் வெளியான திரைப்படம் பிசாசு. இயக்குனர் பாலா தயாரித்த இப்படத்தில் நாகா, பிரயகா மார்ட்டின், ராதாரவி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். வழக்கமான பேய் படத்தைப் போல் அல்லாமல், அதனுள் காதல், சென்டிமென்ட் என உணர்வுப்பூர்வமான காட்சிகளை நிரப்பினார். மிஷ்கினின் தனித்துவமான உருவாக்கப் பாணியில் இருந்த அப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இதனால் பிசாசு 2 படமும் எதிர்பார்ப்பில் உள்ளது. சமீபத்தில் படப்பிடிப்புக்கு பிரம்மாண்டமான செட் வேலைகள் திண்டுக்கல்லில் துவங்கியது. இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா உடன் கம்போசிங்கில் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்திருந்தார். பாடலாசிரியர் கபிலன் படத்திற்கு இரண்டு பாடல்கள் எழுதியுள்ளாராம். பிசாசு 2 படத்திற்கான பாடல் பணிகள் ஒருபுறம் நடந்து கொண்டே இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இன்று பிறந்தநாள் கொண்டாடும் இப்படத்தின் நாயகி ஆண்ட்ரியாவுக்கு இயக்குனர் மிஷ்கின் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். பிசாசு 2 படத்தில் இடம்பெறும் ஆண்ட்ரியாவின் தோற்றத்தை நள்ளிரவு வெளியிட்ட மிஷ்கின், அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்களில் ஆண்ட்ரியாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ஆண்ட்ரியாவின் கேரக்டர் லுக் போஸ்டரை பார்த்த ரசிகர்கள். 80களில் வரும் ஆங்கிலோ இந்திய பெண் ரோலில் ஆண்ட்ரியா நடிக்கக்கூடும் என்று யூகித்து கமெண்ட் செய்து வருகின்றனர். மாஸ்டர் படத்தில் ஆண்ட்ரியாவின் நடிப்பை காண ஆவலாக உள்ளனர் ரசிகர்கள். அமேசான் ப்ரைம் வழங்கிய புத்தம் புது காலை ஆந்தாலஜியிலும் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் ஆண்ட்ரியா.
Let’s light the candle and celebrate the special day of our protagonist Andrea. @andrea_jeremiah
தென்னிந்திய அளவில் மிகவும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக் பாஸ்.
இது தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
இதில் தற்போது தமிழில் உலக நாயகன் கமல் ஹாசன் மற்றும் தெலுங்கில் நாகார்ஜுனா தொகுத்து வழங்கி வருகின்றனர்.
தமிழில் பிக் பாஸ் 4 துவங்குவதற்கு முன்பே, தெலுங்கில் பிக் பாஸ் சீசன் 4 துவங்கியது. அதனால் இன்று பிக் பாஸ் தெலுங்கு சீசன் 4ன் பைனல் பிரமாண்ட முறையில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 4ல் நாகார்ஜுனா, தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடலுடன் செம மாஸாக என்ட்ரி கொடுத்துள்ளார்.
தளபதி விஜய் தற்போது தென்னிந்திய அளவில் கொண்டாடப்படும் மிக பெரிய நடிகர்களில் ஒருவராகி விட்டார், இவரின் திரைப்படங்களுக்கு தொடர்ந்து பெரிய அளவில் வரவேற்பு கிடைத்து வருகிறது.
மேலும் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். ரசிகர்களிடையே மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் அடுத்த வருடம் பொங்கல் அன்று திரைக்கு வரும் எதிர்பார்ப்படுகிறது.
அதனை தொடர்ந்து இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் தளபதி 65 திரைப்படம் மிக பிரமாண்டமாக உருவாகவுள்ளது.
இந்நிலையில் தளபதி விஜய் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் அழைப்பை ஏற்று கிறீன் இந்தியா சவாலாக தனது வீட்டில் மரம் ஒன்றை விதைத்தார்.
மேலும் அதனை “இது உங்களுக்காக மகேஷ் பாபு” என புகைப்படத்துடன் பதிவிட்டு இருந்தார். இதனிடையே தற்போது அந்த பதிவிற்கு 4 லட்சத்திற்கும் அதிகமாக லைக்ஸ்கள் குவிந்துள்ளது.
இது வேறு எந்த ஒரு தென்னிந்திய நடிகர்களும் செய்திராத சாதனை என்பது குறிப்பிடத்தக்கது.
பிக்பாஸ் சீசன் 4 ரசிகர்களின் பேராதரவை பெற்று 75 நாட்களை கடந்து சென்று கொண்டு இருக்கிறது, மேலும் இதில் முக்கிய போட்டியாளர்கள் பலரும் வெளியேறி வருகின்றனர்.
அந்த வகையில் நேற்று அர்ச்சனா இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்ற பட்டார், இதனால் அவருடன் பிக்பாஸ் வீட்டில் நெருக்கமாக இருந்த ரியோ, சோம், கேபி மூவரும் கவலையாக இருந்தனர்.
மேலும் தற்போது இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது, அதில் பிக்பாஸ் போட்டியாளர்கள் ஒருவரை ஒருவர் தேர்ந்தெடுத்து கேள்வி கேட்டு கொள்கின்றனர்.
அப்போது பாலா ஆரியிடம் பைனல்ஸில் உங்களுடன் வேறு எந்த மூன்று போட்டியாளர்கள் இருக்க ஆசைப்படுவீர்கள் என்ற கேள்வியை கேட்டுள்ளார்.
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தற்போது இறுதி போட்டியை நோக்கி நகர்ந்து வருகிறது, இதில் கலந்து கொண்ட பிரபல தொகுப்பாளினி அர்ச்சனா.
ஆரம்பத்தில் வீட்டில் நன்றாக செயல்பட்டு வந்தாலும் பின்னர் ரசிகர்களின் எதிர்மறையான விமர்சங்களையே பெற்று வந்தார்.
அதுமட்டுமின்றி நேற்று இவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்ற பட்டார், மேலும் இவருடன் வீட்டில் நெருக்கமாக இருந்த ரியோ, சோம், கேபி மூவரும் கண்கலங்கினர்.
இந்நிலையில் தற்போது தனது வீட்டிற்கு திரும்பியுள்ள அர்ச்சனா, அவர் எடுத்துக்கொண்ட முதல் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
ஆம் தனது மகள் சாரா உடன் அர்ச்சனா இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது, My Bossy Kumaru is back and I’m lovin it!!! கடவுள் இருக்கான் குமாரு” என சாரா பதிவிட்டுள்ளார்.