பிக்பாஸில் நெருக்கமாக இருந்த அபிராமி-சாக்ஷி இடையே ஏற்பட்ட விரிசல் : காரணம் இதுதான்!!

1196

அபிராமி-சாக்ஷி

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவரும் பிக்பாஸ் 3 ஷோவில் தற்போது 16 போட்டியாளர்கள் உள்ளனர். அதில் ஆரம்பம் முதலே அபிராமி வெங்கடாச்சலம் மற்றும் சாக்ஷி அகர்வால் இருவரும் நெருக்கமாகவே இருந்து வருகின்றனர்.

இன்று எலிமினேஷனுக்கான நாமினேஷன் நடைபெற்றது. அந்த லிஸ்டில் நடிகை சாக்ஷி அகர்வால் பெயர் இடம்பெற்றிருந்தது. ஆனால் அது பற்றி அபிராமி பெரிதாக ரியாக்ட் செய்யவில்லை.

ஆனால் லிஸ்டில் சேரன் பெயர் அறிவிக்கப்பட்டதும் அபிராமி ஷாக் ஆகி, அவர் ஏன் நாமினேட் ஆனார் என அதிர்ச்சியுடன் கேட்டார்.

இதை பார்த்த சாக்ஷி அகர்வால் கோபமாகி, ‘நான் நாமினேட் ஆனது பற்றி உனக்கு கவலை இல்லை. ஆனால் சேரனுக்கு மட்டும் ஷாக்” என இரவு பேசும்போது அபிராமியிடம் சண்டை போட்டார்.