கர்ப்பமாக இருப்பதே தெரியாமல் இருந்த நடிகை எமி ஜாக்சன்!!

1257

லண்டன் நடிகை எமி ஜாக்சனுக்கும், லண்டன் தொழிலதிபர் ஜார்ஜ்க்கும் நிச்சயதார்த்தம் முடிந்திருந்த நிலையில் தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார் எமி ஜாக்சன்.

திருமணம் செய்துகொள்ளாமல் கர்ப்பமாக இருக்கிறீர்கள் என விமர்சனங்கள் எழுந்தாலும் லண்டனை சேர்ந்த எமிக்கு இது பெரிதாக தெரியவில்லை.

இந்நிலையில் இதுகுறித்து பேட்டியளித்துள்ள எமி, நான் கர்ப்பமாக இருப்பது எனக்கே ஆறு வாரங்களுக்கு தெரியாது. தாமதமாக தெரிந்துகொண்ட பின்னர் அதற்கான சிகிச்சைகளை எடுத்து வருகிறேன்.

விரைவில் எனது காதலரை திருமணம் செய்துகொள்ளவிருக்கிறேன். நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. தற்போது உலகம் சுற்றும் நான் எனது குழந்தை பிறந்தபின்னர், குழந்தையுடன் சேர்ந்து உலகம் சுற்றுவேன் என கூறியுள்ளார்.