நடிக்க முடியாது என படப்பிடிப்பை நிறுத்திவிட்டு வெளியேறிய நடிகை தமன்னா!!

1505

நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு, ஹிந்தி என படங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார். ஹிந்தியில் சயீரா நரசிம்ம ரெட்டி, குயின் படத்தின் ரீமேக், ஹிந்தி ஒரு படம் என ரிலீஸ்க்காக காத்திருக்கிறார்.

இந்நிலையில் தெலுங்கில் ராஜீ காரி காதி படத்தின் 3 ம் பாகத்தை எடுத்து வருகிறார்கள். இதில் ஹீரோயினாக தமன்னா நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கிவிட்ட நிலையில் தமன்னா நடித்துவந்துள்ளார்.

ஆனால் அவரிடம் தெரியாமலேயே கதையில் இயக்குனர் ஓம்கர் மாற்றம் செய்திருந்தது தனக்கு பிடிக்காததால் அந்த படத்தில் இருந்து நடிக்க முடியாது என கூறி விலகிவிட்டாராம். இதனால் படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளது.