பெற்ற மகளை கடத்திய பிக்பாஸ் வனிதா : கைது செய்ய துடிக்கும் போலீஸார்!!

981

நடிகர் விஜயகுமாரின் மகளான வனிதாவிற்கும் தெலுங்கானாவை சேர்ந்த ஆனந்தராஜ் என்பவருக்கும் கடந்த 2012ல் திருமணம் நடந்தது. பிறகு கருத்து வேறுபாட்டின் காரணமாக விவகாரத்து பெற்ற இவர்களுக்கு ஜோவிதா என்ற மகள் உள்ளார்.

இந்நிலையில் ஜோவிதாவை வனிதா கடந்த பிப்ரவரி மாதம் சென்னைக்கு அழைத்து வந்துள்ளார். இதனையடுத்து தனது மகளை கடத்தி சென்றுவிட்டதாக வனிதா மீது ஆனந்தராஜ் போலீஸில் ஆள் கட த்தல் புகார் ஒன்றை கொடுக்க வனிதாவை கைது செய்ய தெலுங்கானா போலீஸார் மும்முரம் காட்டி வருகின்றனர்.

மேலும் தற்சமயம் பிக்பாஸ் வீட்டினுள் வனிதா உள்ளதால் பிக்பாஸ் வீடு செட் அமைக்கப்பட்டுள்ள நசரத்பேட்டை போலீஸாரிடம் தெலுங்கானா போலீஸார் உதவியை கோரியுள்ளனர். இதனால் எந்நேரத்திலும் வனிதா கைதாகலாம் என கூறப்படுகிறது.