வனிதா மகள் கொடுத்த வாக்குமூலம், சர்ச்சையில் புதிய திருப்பம் : போலீஸ் விசாரணையால் அதிர்ந்த பிக்பாஸ் வீடு!!

1873

தற்போது பிக்பாஸ் வீட்டில் நடந்து வரும் பல சண்டைகளுக்கு காரணமானவர் வனிதா விஜயகுமார். பிரபல நடிகர் விஜயகுமாரின் மகள் தான் இவர்.

இவரது இரண்டாவது கணவர் ஆனந்தராஜை இவர் 2012ல் விவாகரத்து செய்துவிட்டார். அவர்களுக்கு ஜெயந்திகா என்ற ஒரு மகள் உள்ளார். விவாகரத்து ஆன பிறகு ஆனந்தராஜ் உடன் தான் அவரது மகள் வசித்துவந்தார்.

அதனப்பிறகு சமீபத்தில் மகளை அழைத்துவந்த வனிதா திருப்பி அனுப்பவில்லை. அதனால் அவர் தன்னுடைய மகளை கடத்திவிட்டார் என போலீசில் புகாரை அளித்தார். இது பற்றி விசாரிக்க தெலுங்கானா போலீசார் இன்று பிக்பாஸ் செட்டுக்கு வந்துள்ளனர். இதனால் பிக்பாஸ் வீடு பரபரப்பாக இருந்துள்ளது.

மேலும் அவர்கள் மாலையில் வனிதா மகள் ஜெயந்திகாவை நேரில் வரவைத்து விசாரித்துள்ளனர். அவர் அளித்த வாக்குமூலத்தில் தான் தாயுடன் செல்ல விரும்புவதாக தெரிவித்துள்ளார். இதனால் வனிதா கைதாவதில் இருந்து தப்பியுள்ளார்.