பிக் பாஸ் வீட்டுக்குள் நுழையும் போலீஸ் : கைதாகும் வனிதா, மீரா மிதுன்!!

1123

பிக் பாஸ் சீசன் 3 கடந்த மாதம் தொடங்கி ஒளிபரப்பாகி வருகிறது. போட்டியின் துவக்கத்திலேயே காதல், மோதல் என்று பரபரப்பாக ஒளிபரப்பாகிய பிக் பாஸ் நிகழ்ச்சியில், தற்போது தமிழ் பெண்கள் மற்றும் தமிழ் கலாச்சாரம் குறித்து பேசிய மதுமிதா மீது சக பெண் போட்டியாளர்கள் கடும் கோபமடைந்திருப்பதோடு அவரை தனிமை படுத்தியுள்ளனர்.

இதனால், மதுமிதாவின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டு அவர் தனியாக புலம்பி வருகிறார். இது நீடித்தால் அவர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்படுவார், என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், வனிதா மற்றும் மீரா மிதுன் ஆகியோரை போலீஸார் கைது செய்வதற்காக பிக் பாஸ் வீட்டுக்குள் விரைவில் நுழைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆள்கடத்தில் வழக்கில் வனிதா விஜயகுமாரை தெலுங்கானா போலீஸார் கைது செய்ய முடிவு செய்துள்ளனர். இதனால், தெலுங்கானா போலீஸ் குழு விரைவில் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைய உள்ளார்களாம்.

அதேபோல், அழகிப் போட்டி நடத்துவதாக சில மோசடிகளை செய்ததாக மீரா மிதுன் மீது புகார்கள் எழுந்துள்ளது. இது தொடர்பாக காவல் நிலையத்தில் அவர் மீது கொடுக்கப்பட்டுள்ள புகார்களின் விசாரணைக்கு ஆஜராகும்படி அவருக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், அவர் யாருக்கும் தெரியாமல் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றுவிட்டாராம்.

இதனால், மீரா மிதுனை தேனாம்பேட்டை போலீஸார் கைது செய்ய முடிவு செய்துள்ளார்களாம். எனவே, விரைவில் அவர்களும் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைய உள்ளதாக கூறப்படுகிறது.

பிக் பாஸ் போட்டியாளர்களுக்கிடையே ஏற்படும் சண்டைகள் தான் பெரும் சர்ச்சையை உருவாக்கும் என்றால், தற்போது போட்டியாளர்களை போலீஸார் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட உள்ள தகவால் பிக் பாஸ் போட்டியே தற்போது சர்ச்சையாகியுள்ளது.