“காதலன் படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்கள் தான்” – 27 வருடங்களுக்குப் பிறகு தகவலை வெளியிட்ட இயக்குனர் !

372

இந்தியாவின்…

பிரம்மாண்டமான இயக்குனர் ஷங்கர், பிரபுதேவா கூட்டணியில் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்ற திரைப்படம் தான் கடந்த 26 ஆண்டுகளுக்கு முன் வெளியான “காதலன்”.

இந்த படம் ரிலீசான காலகட்டங்களில் அதனுடன் வெளியான எந்த படங்களும் எந்த தியேட்டரிலும் ரிலீஸ் செய்ய அனுமதிக்கப் படாததால் இந்த படம் தனியாகவே எல்லா தியேட்டர்களிலும் ரிலீஸ் ஆனது. 100% தியேட்டர்களில் ரிலீஸ் ஆனாலும், ஒவ்வொரு திரையரங்கிலும் 100 சதவீத மக்கள் இருந்தார்கள்.

இந்த படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்த பிரபல இயக்குனர் வசந்தபாலன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், “இந்த படத்தின் நாயகனாக முதலில் பிரசாந்த் மற்றும் நாயகியாக மாதுரி தீக்ஷித் என்கிற பாலிவுட் நடிகையும் தான் எங்கள் மனதிற்குள் இருந்தார்கள்.

ஷங்கர் தான் பிரபுதேவா தான் நடிக்க வேண்டும் என அடம் பிடித்து அவரை நடிக்க வைத்தார். கால்ஷீட் பிரச்சனையால் மாதுரி விலகிக் கொள்ள நக்மா நடித்தார்”. என கூறியுள்ளார்.

அவர்கள் இருவரும் நடித்திருந்தால் நிச்சயம் இப்படம் இன்னும் வேற லெவலில் இருந்து இருக்கும் என்பதே ரசிகர்களின் கருத்தாக இருந்து வருகிறது.