அதிதி ஷங்கர்..
நடிகை அதிதி ஷங்கர். தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர் என போற்றப்படுபவர் ஷங்கர். தமிழில் உச்ச நடிகர்களை வைத்து பல ஹிட் படங்களை கொடுத்துள்ள ஷங்கர் தற்போது தெலுங்கில் ராம்சரணை இயக்கி வருகிறார்.
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை ஆர்சி 15 என்று குறிப்பிட்டு வருகின்றனர்.இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் அடுத்ததாக சிம்பு நடிக்கும் கொரோனா குமார் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்நிலையில் ஷங்கரின் மகளை தொடர்ந்து அவரது மகன் அஜித் ஷங்கரும் சினிமாவில் அடியெடுத்து வைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விருமன் படத்தில் மதுரை பெண்ணாக நடித்துள்ளார் அதிதி. தேன்மொழியாக மிகவும் துணிச்சலான கதாபாத்திரத்தில் அவர் நடித்திருக்கிறாராம்.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் ‘விருமன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரிலேயே பாவாடை தாவணி அழகில் ரசிகர்களை அதிதி கவர்ந்து விட்டதால் படம் வெளியாவதற்கு முன்பே இவருக்கான ரசிகர் கூட்டமும் உருவாகிவிட்டது.
இதையடுத்து கோகுல் இயக்கத்தில் உருவாகும் கொரோனா குமார் திரைப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க அதிதி ஷங்கர்ஒப்பந்தமாகி உள்ளதாக கூறப்படுகிறது. இவ்வாறு சினிமாவில் பிசியாக நடித்து வந்தாலும் விதவிதமாக போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார் அதிதி.
முதல் படத்தில் பாவடை தாவணியில் கிராமத்து பெண்ணாக நடித்திருந்தாலும், தன்னால் கவர்ச்சியாகவும் நடிக்க முடியும் என்பதை நிரூபிக்கும் விதமாக இவரின் சமீபத்திய போட்டோஷூட்டுகள் அமைந்துள்ளன.
அந்த வகையில் தற்போது ஜீன்ஸ் பேண்ட் மற்றும் டைட்டான டீ சர்ட் அணிந்தவாறு விதவிதமாக ஹாட் போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை சூடாக்கி வருகின்றன.