பார்வையில்லாமல் காட்டு பயலே பாட்டுக்கு கீபோர்ட் வாசித்த குட்டிப் பெண் – வைரலாகும் வீடியோ!

484

சூர்யா…

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப்போற்று என்ற திரைப்படம் உருவாகி உள்ளது.

சூர்யாவின் பிறந்த நாளான ஜூலை 23ஆம் தேதி படத்திலிருந்து காட்டு பயலே என்ற பாடலின் ஒரு நிமிட வீடியோ வெளியாகி இருந்தது.

இதனயடுத்து ஜூலை 24ஆம் தேதி மாலை இந்த பாடலின் முழு லிரிக் வீடியோ வெளியானது. ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்று சாதனை படைத்து வருகிறது.

ஜிவி பிரகாஷின் இசை ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது. இந்த நிலையில் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சி மூலமாக பிரபலமான பார்வையற்ற பாடகியான குட்டிப்பெண் சுசானா இப்பாடலுக்கு கீபோர்ட் வாசித்து அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

ஜிவி பிரகாஷ் உள்ளிட்டோர் சுசானாவின் திறமையைக் கண்டு வியந்துள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.