இதை பார்த்ததில் இருந்து தூக்கமே வரவில்லை : சின்மயி!!

1148

பாடகி சின்மயி மீடு புகார் கூறி பாலியல் தொல்லை கொடுத்தவர்களுக்கு எதிராக போராடி வருகிறார். மேலும் அவர் டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டதால் அதற்காகவும் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்நிலையில் சின்மயி சமீபத்தில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தை பார்த்து ட்விட்டரில் பிரமிப்புடன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதை பார்த்ததில் இருந்து தூக்கமே வரவில்லை என கூறியுள்ள அவர் படத்தின் நடித்த விஜய் சேதுபதி, சமந்தா உட்பட அனைவரையும் புகழ்ந்து பேசியுள்ளார்.

மேலும் கள்ளக்காதல் வைத்துள்ள பெண்னாக நடித்ததற்காக சமந்தாவை சிலர் ட்ரோல் செய்வது பற்றியும் சின்மயி அதிர்ச்சி தெரிவித்துள்ளார். அதே ஒரு ஆண் நடிகர் படத்தில் கிஸ்/கள்ளக்காதல் வைத்திருந்தால் யாரும் விமர்சிப்பதில்லையே என்று சின்மயி கேள்வி கேட்டுள்ளார்.