நீங்க பண்ணும் போது நாங்க பண்ண கூடாதா? ஓப்பனாக அதிரடியாக கூறிய பூமிகா!!

3015

பூமிகா..

2001 -ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான பத்ரி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை பூமிகா. இதையடுத்து, சில படங்களில் நடித்து வந்த நடிகை பூமிகா ஜில்லுனு ஒரு காதல் படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்து அனைத்து தரப்பு மக்கள் கவனத்தையும் தன் பக்கம் திருப்பினார்.

இவர் தென்னிந்திய படங்கள் மட்டுமில்லாமல் பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். நடிகை பூமிகா தமிழ் படங்களில் அதிகமாக நடிக்கவில்லை. இவர் கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் அவர் நடித்திருந்தார். தற்போது மீண்டும் ஒரு சில குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

பிரபல நடிகை பூமிகா, சினிமாவில் மீண்டும் ஒரு ரவுன்ட் வரவேண்டும் என்று அதற்க்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில், அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை இணையத்தில் பதிவேற்றி இளசுகளின் சூட்டை கிளப்பி வருகிறார். இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில், “கதைக்கு தேவையென்றால் கவர்ச்சியான படுக்கையறை காட்சிகளில் கூட நடிக்க எனக்கு ஓகே” என்று கூறி இருந்தார்.

சொன்னதுபோல், வெப்சீரிஸ் ஒன்றில் படங்களில் இல்லாத அளவுக்கு செம்ம கவர்ச்சியாக நடித்து வருகிறாராம். மேலும் அதில் நடிகை பூமிகா, ஹீரோக்கள் வயதான பிறகும் ஹீரோவாக தான் நடிக்கிறார்கள். ஆனால் கதாநாயகிகள் அப்படி கிடையாது. நிஜ வாழ்க்கையில் கூட அப்படி தான்.

அதிக வயது உடைய பெண்ணை திருமணம் செய்து கொள்ள மக்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள் என்றும், ஆனால் ஆண்கள் மட்டும் அதிக வயதான பிறகும் குறைந்த வயது பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார்கள் என்றும், தன் மகன் வயது நடிகருடன் உடன் ரொமான்ஸ் செய்ய காட்சிகளில் தன்னால் நடிக்க முடியும் என்று பூமிகா தெரிவித்துள்ளார்.