பிக் பாஸ்..
நிகழ்ச்சிக்கு முன்பாகவே இவர் மாடல் என்ற பெயரில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார் மீரா மிதுன். விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நிறைவடைந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் பல்வேறு சர்ச்சையான விஷயங்கள் நடந்தேறியது.
அதிலும் பிக் பாஸ் விஷயங்கள் ஒயில்டு கார்ட் போட்டியாளராக கலந்து கொண்ட மீரா மிதுன் சர்ச்சையின் மொத்த உருவமாக இருந்து வந்தார். சொல்லப்போனால் இந்த சீசனில் வனிதாவிற்கு பின்னர் மிகவும் வெறுக்கப்பட்டது மீரா மிதுன் தான். அந்த அளவிற்கு அம்மணி ரசிகர்களின் ஒட்டு மொத்த வெறுப்பை சம்பாதித்தார்.
இது மட்டுமல்லாது எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் மீராமிதுன் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களையும், கவர்ச்சியான வீடியோக்களையும் பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார்.
தற்போது பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காமல் தவித்து வரும் மீரா, பட வாய்ப்புகளை பெற்ற தீர வேண்டும் என சில வேலைகளை பார்த்து வருகிறார். இந்நிலையில், நடிகர் கமல்ஹாசனை சர்ச்சைக்குள் இழுத்து விட்டுள்ளார் மீரா மிதுன். ஜல்லிக்கட்டின் போது திரிஷா பீட்டாவுக்கு ஆதரவாக பேசி ரசிகர்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்டார்.
அப்போது, “கன்னி வாழ காளை வழிவிட வேண்டும் திரிஷாவை விட்டுவிடுங்கள்” என்று திரிஷாவுக்கு கமல் வக்காலத்து வாங்கினார். காரணம், கமல்ஹாசன் ஒரு பிராமணர் , திரிஷாவும் ஒரு பிரமாணர் என்பதால் தான். நான் பிரமாணனரல்லாத பெண் என்பதால் பிக் பாஸ் வீட்டில் எனக்கு நீதி மறுக்கப்பட்டது. என்று கமல்ஹாசன், த்ரிஷா இருவரது ஜாதியையும் குறிப்பிட்டு பேசி பரபரப்பை கிளப்பி விட்டுள்ளார்.