உங்க படம் சூப்பர்…! எனக்கும் எதாச்சு Think பண்ணி வைங்க…!” இளம் இயக்குனரை பாராட்டிய Superstar…!

485

சூப்பர் ஸ்டார்…

ரஜினிகாந்த் படத்தை இயக்கவேண்டும் என்று பல இயக்குனர்கள் தவமாய் தவமிருந்து வருகின்றார்கள். அவர் அரசியல் களத்தில் குதிக்கும் முன் இன்னும் ஒன்று அல்லது இரண்டு படங்களில் நடிப்பார் என்றும்,

அந்த படத்தை இயக்குவதற்கு யாருக்கு அதிர்ஷ்டம் அடித்து இருக்கிறது என்றும் கோலிவுட்டில் ஒரே பரபரப்பு பேச்சாக இருக்கிறது.

இந்தநிலையில், சமீபத்தில் வெளியான துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான “கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால்” என்ற திரைப்படத்தை பார்த்துள்ளார் ரஜினி.

இதை இயக்கியவர் மிகப்பெரிய ரஜினி ரசிகரான தேசிங்கு என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது என்பது தெரிந்ததே.

இந்த படத்தை பார்த்த பிறகு இயக்குனரை அழைத்து பேசிய ரஜினி, “நேத்துதான் உங்க படம் பார்த்தேன், சூப்பரா இருக்கு…! உங்களுக்கு பிரைட் ஃப்யூச்சர் இருக்கு… எனக்கும் இந்த மாதிரி Think பண்ணுங்க…!” என்று பேசிய இந்த ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.