ஜோதிகாவால் சூர்யாவுக்கு வந்த புது சிக்கல்!!

1206

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா, வித்தியாசமான முயற்சிகளில் ஈடுபடுவதோடு, வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். நடிப்பு மட்டும் இன்றி, தனது அகரம் பவுண்டேஷன் மூலம் ஏழை மாணவர்களின் கல்விக்கு பெரும் உதவி செய்து வருகிறார்.

தற்போது நடிப்பதுடன், தனது 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மூலம் திரைப்படங்களையும் சூர்யா தயாரித்து வருகிறார்.

சூர்யாவை திருமணம் செய்துக் கொண்டு நடிப்புக்கு முழுக்கு போட்ட ஜோதிகா, தற்போது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார். அவரது நடிப்பில் நேற்று வெளியான ‘ராட்சசி’ ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

இதற்கிடையே, ஜோதிகாவின் பேச்சால் சூர்யா புது சிக்கலில் சிக்கியிருக்கிறார். அதாவது, ராட்சசி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்றது.

இதில் பேசிய ஜோதிகா, “ஒன்று இரண்டு ஹீரோயின்களுடன் டூயட் பாடுவது, அவர்களை காதலிப்பது போன்ற ரெகுலர் விஷயங்களை தான் முன்னணி ஹீரோக்கள் செய்து வருகிறார்கள்” என்று கூறியதோடு, ”சினிமாவில் ஹீரோக்களின் ஆதிக்கம் தான் இருக்கிறது, இது மாற வேண்டும். அதேபோல் சினிமாவில் பெண்களை இழிவாக பேசுவது, தறக்குறைவாக பேசுவதையும் கைவிட வேண்டும்.” என்று பேசினார்.

இந்த நிலையில், சூர்யாவின் ‘காப்பான்’ படத்தின் ஒரு பாடலின் வரிகள் வீடியோ வெளியாகியுள்ளது. “சிரிக்கி மக” என்று தொடங்கும் இந்த பாடலில் பெண்களை இழிவாக சித்தரிக்கும் வார்த்தைகள் அதிகமாக இடம் பெற்றுள்ளது.

”ஒருவனை காதலித்துவிட்டு, இன்னொருவருடனுன் குழந்தை பெற்றுக்கொண்டாள்” என்ற ரீதியில் பெண்களை கேவலப்படுத்தும் விதமாக இந்த பாடல் வரிகள் அமைந்திருக்கிறது.

இதனை சுட்டிக்காட்டியிருக்கும் நெட்டிசன்கள், ”ஊருக்கு உபதேசம் செய்யும் ஜோதிகா முதலில் அவரது கணவருக்கு உபதேசம் செய்திருக்கலாம்” என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.