வியர்க்க வி றுவிறுக்க செல்ஃபி வெளியிட்ட கீர்த்தி சுரேஷ் – கலாய்க்கும் ரசிகர்கள் !

121

கீர்த்தி சுரேஷ்…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ், இவர் விஜய் இயக்கிய இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

பின்பு ஒரு சில வருடங்களிலேயே விஜய், விஷால், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலம் அடைந்தார், கடந்த வருடத்தில் கூட நடிகையர் திலகம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார். தற்போது ‘தலைவர் 168’ என்னும் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ராமோஜி ஃபிலிம் சிட்டியில் வி றுவிறுப்பாக நடைபெற்றது.

இந்த படத்தில் பிரகாஷ் ராஜ், மீனா, குஷ்பு, சூரி, சதிஷ் உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். தற்போது புது வரவாக நயன்தாராவும் நடிக்கிறார். இந்த படம் மூலம் முதன் முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் இசையமைப்பாளர் டி. இமான் இணைந்துள்ளார்.

தற்போது, ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே முடங்கி கிடக்கும் கீர்த்தி சுரேஷுக்கு தமிழில் ஒரு படமும், தெலுங்கில் இரண்டு பட வாய்ப்புகளை கைகளில் வைத்திருக்கிறார்.

தற்போது சில செல்ஃபி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், இது கீர்த்தி சுரேஷ்னு எழுதி போடுங்கப்பா ? அடையாளமே தெரியல என்று கி ண்டல் கே லிகளை தெரிவித்து வருகிறார்கள்.