பிக்பாஸ் லாஸ்லியாவின் சூட்சம ரகசியம் இதுதான்!!

1176

பிக்பாஸ் சீசன் 3 ல் தற்போது இளம் ரசிகர்களை அதிகம் கவர்ந்திருப்பவர் லாஸ்லியா. இலங்கையிலிருந்து வந்திருக்கும் இவர் ஒரு செய்தி வாசிப்பாளர் எனலாம்.

தற்போது பிக்பாஸ் வீட்டில் காலையில் போடப்படும் பாட்டுக்கு ஒவ்வொரு நாளும் அவர் ஆடும் விதமும் அவரின் முக பாவனைகளும் பலருக்கும் பிடித்திருக்கிறது.

நிகழ்ச்சி தொடங்கும் போது அவர் இலங்கை தமிழ் தொனியில் செய்தி வாசிக்க கமல் டாஸ் கொடுத்தார். பின்னர் பிக்பாஸ் வீட்டிற்குள்ளும் இது தொடர்ந்தது.

ஊடக போட்டி உலகில் அவசர செய்திகள் கூட லட்சம் பார்வைகளுக்கு திணறிக்கொண்டிருக்கையில் லாஸ்லியா செய்தி வாசிக்கும் லஞ்ச் டைம் நியூஸ் 1 மில்லியன் வியூஸைத் தாண்டி சாதாரணமாக சாதனை படைக்கிறதாம். இதன் ரகசியம் அவர் செய்தி வாசிக்கும் அழகு தானாம்.