பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடந்த மோசமான செயல் : பொதுமக்கள் எதிர்ப்பு!!

1265

மக்களிடன் பேவரைட் நிகழ்ச்சியாக விளங்கும் பிக் பாஸ் மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில், நிகழ்ச்சியில் இடம்பெறும் சில மோசமான செயலால், தற்போது நிகழ்ச்சிக்கு மக்களின் எதிர்ப்பு குரல் ஒலிக்க தொடங்கியுள்ளது.

மதுமிதா, வனிதா என இரண்டு குழுக்களாக போட்டியாளர்கள் பிரிந்து சண்டைப்போட்டு வருகின்றனர். போட்டியாளர்களுக்கு இடையே ஏற்படும் சண்டை நிகழ்ச்சியை பரபரப்பாக நகர்த்தும் என்பதால், அந்த சண்டையை தான் பிக் பாஸ் நிகழ்ச்சி குழுவும் அதிகமாக போக்கஸ் செய்கிறது.

அந்த வகையில், நிகழ்ச்சியில் ஷெரின் மிக மோசமான வார்த்தைகளை பேசியது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

நிகழ்ச்சியை பார்த்த மக்கள் அனைவரும், ஷெரின் என்ன இவ்வளவு மோசமாக பேசுகிறாரே, என்று அவருக்கு கண்டனம் தெரிவித்ததோடு, நிகழ்ச்சியை ஒளிபரப்பும் விஜய் டிவிக்கு எதிராகவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

“பலரும் இந்த நிகழ்ச்சியை பார்க்கிறார்கள். அனைத்து வயதினரும் நிகழ்ச்சியை பார்க்கிறார்கள் என்பதை உணர்ந்து, சேனல் கொஞ்சமாவது பொறுப்புடன் நடந்துக் கொள்ள வேண்டும்” என்று மக்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

சமூக வலைதளங்களில் ஷெரின் பேசிய மோசமான வார்த்தைகளுக்காக அவர் கடுமையாக விமர்சிக்கும் நெட்டிசன்கள், ஷெரீனை நிகழ்ச்சியை விட்டு வெளியேற்ற வேண்டும், என்ற கோரிக்கையும் விடுத்துள்ளனர்.