என்னுடன் 3 மணி நேரம் கேரவனில் நீ இருந்தாய் : ப்ரஸ் மீட்டில் பத்திரிகையாளரை தர்மசங்கடமாக்கிய கங்கனா!!

1388

பாலிவுட் திரையுலகில் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் தொடர்ந்து நடித்து வருபவர் கங்கனா. இவரை சுற்றி எப்போதும் ஒரு வகை சர்ச்சை இருந்துக்கொண்டே இருக்கும்.

அந்த வகையில் சமீபத்தில் இவர் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் ஒரு பத்திரிகையாளரிடம் கடுமையாக வாக்குவாதம் செய்தார்.

இதில் அவரை ஒரு கட்டத்தில் ‘நீ என்னுடன் கேரவனில் 3 மணி நேரம் இருந்தாய், எனக்கு மெசெஜ் அனுப்பினாய்’ என கூறி தர்மசங்கடமாக்கினார்.

பிறகு அந்த பத்திரிகையாளரும் ‘உங்களை பேட்டி எடுக்க தான் கேரவனுக்கு வந்தேன், அரை மணி நேரம் தான் உங்களுடன் இருந்தேன், உங்களுக்கு மெசெஜ் அனுப்பியிருந்தால், அந்த ஸ்கிரீன் ஷாட் வெளியிடுங்கள்’ என கூறினார்.