60 வயதில் ஹனிமூன் சென்ற பிரபல நடிகர்.. புலம்பும் 90ஸ் கிட்ஸ்!!

291

ஆஷிஷ் வித்யார்த்தி..

தமிழில் வில்லன் நடிகராக பெருமளவில் பிரபலமானவர் நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி. இவர் இந்திய சினிமாத்துறையில் கிட்டத்தட்ட 11 மொழிகளை கற்று பல மொழிப்படங்களில் நடிகராக நடித்து பிரபலமானவர். குறிப்பாக கில்லி படத்தில் நடிகர் விஜய்யின் தந்தையாகவும் போலிஸ் அதிகாரியாகவும் நடித்து பிரபலமானார்.

அதன்பின்னர், தில், பாபா, ஏழுமலை, தமிழன், ராமச்சந்திரா, தூம், ஆறு, குருவி, பீமா, உத்தமபுத்திரன், மாப்பிள்ளை, என்னை அறிந்தால் உள்ளிட்ட பல டாப் நடிகர்களின் படங்களில் நடித்து நன்கு பரிட்சையமானவர். இதனிடையே, ஆஷிஷ் வித்யார்த்தி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, மராத்தி, பெங்காலி, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளும்,

விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்....

200க்கும் மேற்பட்ட பல படங்களில் வில்லனாகவும் நடித்து உள்ளார். ஆஷிஷ் வித்யார்த்தி பின்னணி பாடகியான ராஜோஷி என்பவரை முதல் திருமணம் செய்த நிலையில் இவருக்கு ஒரு மகனும் உள்ளார். முதல் மனைவியை விவாகரத்து செய்யாமலே அண்மையில் தனது 60 வது வயதில் ரூபாலி பருவா என்பவரை 2 ம் திருமணம் செய்து கொண்டார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சைக்குள்ளானது.

அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் அவ்வப்போது தனது மனைவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு வரும் அவர் தற்போது மனைவியுடன் ஹனிமூன் சென்ற போட்டோக்களை வெளியிட்டுள்ளார். இதை பார்த்து கடுப்பான 90ஸ் கிட்ஸ், பல்லு இருக்கிறவன் பக்கோடா சாப்பிடுறான் விடுங்கப்பா என ஆதங்கப்பட்டுள்ளனர்.