
கடந்த ஆண்டு உறவினர் திருமணத்தில் கலந்துகொள்ள துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி, ஹோட்டல் அறையில் உயிரி ழந்தார். அவரது மறைவு இந்திய திரையுலகை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியதோடு, அவரது மரணத்திற்கு பல காரணங்களும் கூறப்பட்டது.
இந்த நிலையில், நடிகை ஸ்ரீதேவியின் மர ணம் இயற்கையானது அல்ல, திட்டமிட்ட படு கொ லை, என்று கேரள டிஜிபி அதிர்ச்சியளிக்கும் தகவலை வெளியிட்டுள்ளார்.
கேரள போலிஸின் மருத்துவ ஆலோசகராகவும் தடயவியல் மருத்துவ பேராசிரியராக பணிபுரிந்தவர் டாக்டர் உமாடாதன். இவர் கடந்த வாரம் உடல்நலக் குறைவால் உயிரி ழந்துள்ளார். இவர் இறப்பதற்கு முன்பாக கேரள டிஜிபி ரிஷிராஜ் சிங்கிடம், ஸ்ரீதேவி மர ணம் குறித்து பேசியுள்ளார்.
இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய டிஜிபி ரிஷிராஜ் சிங், ”நடிகை ஸ்ரீதேவி மரணம் குறித்து சொன்ன தடயங்களை பார்க்கும் போது ப டுகொ லை செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஶ்ரீதேவி அதிகமாக குடித்துவிட்டு குளியல் அறையில் மூழ்கிவிட்டார் என்பது அபத்தம். அப்படியே அதிகமாக குடித்திருந்தாலும் 1 அடி தண்ணீரில் ஒருவர் மூழ்க முடியாது.
அவரது தலையை பிடித்து யாரேனும் அழுத்தினால் தான் மரணிக்க முடியும் என்பது உமாடாதனின் கருத்து.” என்று தெரிவித்துள்ளார்.
கேரள டிஜிபி-யின் இந்த தகவலால் பாலிவுட் சினிமா மட்டு இன்றி ஒட்டு மொத்த இந்திய சினிமாவிலேயே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
                

