தமிழ்நாட்டில் தான் இந்த நிலைமை : நடிகை ஓவியா வருத்தம்!!

1107

2019 ஆம் ஆண்டு வெளியான ‘களவாணி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஓவியா, சமீபத்தில் ‘களவாணி 2’விலும் ஹீரோயினாக நடித்திருக்கிறார். சினிமா வாய்ப்பு குறைந்து வாய்ப்புகள் குறைந்த நிலையில், பிக் பாஸ் என்ற டிவி நிகழ்ச்சி மூலம் மீண்டும் பிரபலமான ஓவியா, கையில் தற்போது ஏராளமான பட வாய்ப்புகள் இருக்கின்றன.

அவரது நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ‘களவாணி 2’ படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றிருப்பதால் அம்மணி குஷியாக இருக்கிறாராம்.

இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் அரசியலுக்கு வரும் எண்ணம் இருக்கிறதா? என்று ஓவியாவிடம் கேட்டதற்கு, “சினிமா என்ன அரசியலில் ஈடுபடுவதற்கான பயிற்சி மையமா?” என்று கேள்வி எழுப்பியவர், “சினிமாவில் கொஞ்சம் பிரபலமாகிவிட்டால், அதை வைத்துக்கொண்டு அரசியலுக்கு வந்துவிடும் நிலைமை தமிழ்நாட்டில் மட்டும் தான் இருக்கிறது.” என்று தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும் பேசியவர், “தற்போது எனக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை, எதிர்காலத்தில் அரசியல் ஆசை வந்தால் அப்போது வருவேன். அப்போதும் தமிழக அரசியலில் தான் ஈடுபடுவேன். நான் தமிழ்நாட்டை விட்டு செல்ல மாட்டேன்.

எதாவது நல்லது செய்தால் அது தமிழ்நாட்டு மக்களுக்காக தான் செய்வேன். இங்கு தான் எனக்கு ஏராளமான ரசிகர்களும் இருக்கிறார்கள். அதே சமயம், ஓவியா ஆர்மியை தவறாக பயன்படுத்த மாட்டேன்.” என்று தெரிவித்துள்ளார்.