40 வயது நடிகருடன் கைகோர்க்கும் குட்டி நயன்.. அந்த நடிகரோட படமா? ஆச்சரியத்தில் ரசிகர்கள்!!

7045

அனிகா..

2015 இல் கௌதம் மேனன் இயக்கத்தில், அஜித் நடிப்பில் உருவான என்னை அறிந்தால் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அனிகா. அந்த படத்தின் மூலம் நடிகர் அஜித்தின் மகளாக அழைக்கப்படும் அனிகா தற்போது இளம் நடிகையாக மாறி தற்போது புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

இவர் நானும் ரவுடி தான், மிருதன், விஸ்வாசம், Queen Web Series என பல Platformகளில் நடித்து வந்தார். தமிழ் மட்டுமின்றி மலையாளத்திலும் இவருக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.சமீப காலமாக ஹீரோயின்களுக்கு சவால் விடும் வகையில் கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அனிகா.

சமீப காலமாக கவர்ச்சி உடையில் இணையத்தை கலக்கும் இவர், தற்போது வெளியிட்டுள்ள கவர்ச்சியான புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இவரை வர்ணித்து வருகின்றனர். தற்போது 18 வயதை தாண்டி விட்டு அனிகா நடிக்கும் படங்களில் கூடுதலான கவர்ச்சி மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக முத்த காட்சிகளிலும் இறங்கிவிட்டார்.

இந்நிலையில், இவர் தனுஷின் ஐம்பதாவது படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க கமிட்டாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கு ரசிகர்கள் பலர் அதுக்குள்ள தனுஷ் படமா என்று ஆச்சிரியத்தில் வாய்ப்பிளந்து வருகிறார்கள்.