ராமர் மீது உள்ள பக்தியை வெளிப்படுத்திய கமல் பட நடிகை…! வைரலாகும் புகைப்படம்…!

119

நடிகை சுகன்யா..

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்ற நிகழ்வை உலகமே கொண்டாடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை பல பிரபலங்கள் தங்களுடைய சமூக வலைதளங்களில் ராமரை பற்றிய புகைப்படங்களை பகிர்ந்து தங்களுடைய பக்தியை வெளிப்படுத்துகின்றனர்.

இந்த நிலையில், நடிகை சுகன்யா தனது நெற்றியில் ராமர் உருவத்தையே பொட்டாக வைத்து தனது பக்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

ராமர் பொட்டுடன் கூடிய சுகன்யாவின் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

இவர், புதுநெல்லு புதுநாத்து என்ற பாரதிராஜா இயக்கத்தில் வெளியான திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின் கமல்ஹாசன், விஜயகாந்த், பிரபு, கார்த்திக் சத்யராஜ் உள்பட பல பிரபலங்களுடன் ஜோடியாக நடித்தவர்.