அஜித்தின் ‘கண்ணான கண்ணே’ பாடலை பாடும் சீனப்பெண்…! வைரலாகும் வீடியோ…!

102

விஸ்வாசம்..

வந்தாலும் வந்தது சாதனை மேல் சாதனைதான். விஸ்வாசம் படம் கடந்த வருட ஆரம்பத்தில் வெளியானது. படம் வெளியானது முதல் பெரிய வரவேற்பு கிடைத்தது. குழந்தைகள் மீது உங்கள் ஆசையைத் திணிக்காதீர்கள் என்பதையும்,

மகள் – தந்தைக்குமான பாசப் போராட்டத்தையும் கலக்கல் வேட்டி சட்டையில் சொல்லியிருக்கிறது, இந்த விஸ்வாசம்’. உங்க ஆசையைத் திணிச்சு உங்க குழந்தையை வளர்க்காதீங்க என்னும் கருத்தைப் பேசுகிறது. அஜித் – சிவா காம்போவில் இதுவரை வெளியான படங்களில் விஸ்வாசம் மாஸ் வெற்றி.

இப்போதும் இப்படத்தின் சாதனையை முன்னணி நடிகர்களின் படங்களால் முறியடிக்கப்படவில்லை. இதுவே அஜித் ரசிகர்களுக்கு ஒரு கொண்டாட்டம் தான். தற்போது என்ன விவரம் என்ன என்றால் இந்த படத்தில் இடம் பெற்றுள்ள கண்ணான கண்ணே பாட்டு உலகம் முழுவதும் பயங்கர ஹிட்.

சீன வானொலி மூலம் முகப்புத்தகத்தில் அறிமுகமாகி பிரபலாமாகிய சீனப்பெண் “நிலா” தல அஜித் அவர்களின் நடிப்பில் வெளியாகி பல குடும்பங்களை கவர்ந்த விஸ்வாசம் படத்தில் வரும்

உணர்வுபூர்வமான பாடலை பாடி தனது மகனை தூங்க வைக்கும் காட்சி அழகாக உள்ளது சீனப்பெண் தமிழ் பேசுவது மட்டுமல்லாது பாடுவதும் அழகாக உள்ளது. இதை பெருமையாக இந்த படத்தின் இசையமைப்பாளர் டி. இமான் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.